இன்ஸ்டாவுக்காக பிளேபாய் போட்டோகிராபரை நாடும் ஹீரோயின்கள்.. ஆத்தாடி.. ரம்யா, யாஷிகா ஸ்டில்ஸை பாருங்க!
சென்னை: இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்களை பதிவிடுவதற்காக, நடிகைகள் இப்போது பிளேபாய் புகைப்படக்காரரை நாடி வருகின்றனர்.
எப்போதும் லைம் லைட்டில் இருந்துகொண்டிருக்க ஆசைப்படுபவர்கள் ஹீரோயின்கள். அதற்காக எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள்.
சிலர் பரபரப்பு பேட்டி கொடுப்பது, கருத்துச் சொல்கிறேன் என்று ட்விட்டரில் சர்ச்சையைக் கிளப்புவது, ரசிகர்களின் கேள்விகளுக்குச் சூடாக பதில் சொல்வது என சிலர் இப்படியும் உண்டு.

ஹீரோயின்கள்
இந்த ஏரியாவை சுத்தமாக விலக்கிவிட்டு, ஹாட் புகைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள் சில ஹீரோயின்கள். அவர்களின் நோக்கம், தங்கள் அழகை வித்தியாசமான கோணங்களில் போட்டோவாக்குவது, அதற்கு வரும் ரசிகர்களின் ஏடா கூட கமென்ட்களை ரசிப்பது, இதற்காகவே ஸ்பெஷல் போட்டோஷூட்களை நடத்துவது.

லட்சக்கணக்கில் செலவு
இந்த போட்டோ ஷூட்களுக்காக, தாராளமான செலவு வேறு செய்கிறார்கள். ஏதாவது ஒரு வெளிநாட்டு கடற்கரையில் ஹாயாக அமர்ந்துகொண்டு, கடலை பார்த்தபடி, கடலலையில் அமர்ந்தபடி, மணலில் உருண்டபடி என விதவிதமான போட்டோ எடுத்துத் தள்ளுகின்றனர். இந்த வகை ஹீரோயின்கள் அதிகரித்துவிட்டார்கள் இப்போது.

நம்மூர் நடிகைகள்
தங்களின் ஹாட் போட்டோ ஆல்பமாக, இன்ஸ்டாவை அவர்கள் மாற்றி வருகின்றனர். இதில் இந்தி நடிகைகள்தான் டாப்பில் இருந்தார்கள். அவர்களுக்கு போட்டியாக நம்மூர் நடிகைகளும் பிகினியில் களமிறங்கி இருக்கிறார்கள், ரணகளமாக. நடிகைகளில் இந்தப் புகைப்படங்களை ரசிக்க ஒரு கூட்டம் இருந்தாலும் பலர் எரிச்சலடைகின்றனர்.

இது எங்க வேலை
சிலர் கடுமையான விமர்சனங்களையும் வைக்கின்றனர். இதை எந்த நடிகைகளும் கண்டுகொள்வதில்லை. 'அது உங்க வேலை, இது எங்க வேலை' என்கிற ரீதியில் கிளாமர் போட்டோவில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த மாதிரி ஹாட் புகைப்படங்களுக்காக, இப்போது பிளேபாய் புகைப்படக்காரரை தேடத் தொடங்கி இருக்கிறார்கள் தமிழ் நடிகைகள்.
நிர்வாணப் படங்கள்
பிளேபாய் என்ற பேஷன் இதழுக்காக மாடல்களை படம் எடுப்பவர் எல்.ராமச்சந்திரன். தமிழரான இவர், ஏராளமான சர்வதேச மாடல்களின் நிர்வாணப் படங்களை எடுத்திருப்பவர். இவரிடம் இப்போது நடிகைகள் புகைப்படம் எடுக்கத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் நடிகை யாஷிகா ஆனந்தை இவர் புகைப்படம் எடுத்துள்ளார். சும்மாவே கிளாமர் புகைப்படங்களில் கலக்கும் யாஷிகா இதில் இன்னும் மிரட்டியுள்ளார்.
Recommended Video
கருப்பு வெள்ளை
தேவதையை போல உடையணிந்து, றெக்கைகளுடன் அமர்ந்திருப்பது போல அந்தப் படம் இருக்கிறது. கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டுள்ள இந்த கிளாமர் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அவர் நடிகை ரம்யா பாண்டியனையும் இவர் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த போட்டோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











