டேட்டிங்கில் யாஷிகா.. கைகளை பிடித்தப்படி.. வெட்கத்துடன் பாரில் குதூகலம்.. தெறிக்கவிடும் போட்டோ!

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் டேட்டிங்கில் இருப்பதாக ஷேர் செய்திருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

நடிகை யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமனார்.

முழுக்க டபுள் மீனிங் டயலாக்கும் கவர்ச்சியும் ததும்பிய அந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேபை பெற்றது.

முதிர்ச்சியுடன்..

முதிர்ச்சியுடன்..

தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தார் யாஷிகா ஆனந்த். இருந்த போதும், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான் பெரும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கினாலும் ரொம்ப முதிர்ச்சியுடன் நடந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

மாடர்ன் டிரெஸ்

மாடர்ன் டிரெஸ்

சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக உள்ள நடிகை யாஷிகா ஆனந்த், அவ்வப்போது தனது தனிப்பட்ட விஷயங்களையும் தனது பணி சார்ந்த விஷயங்களையும் அப்டேட் செய்து வருகிறார். மாடர்ன் டிரெஸ் ட்ரெடிஷ்னல் என கலக்கி வருகிறார்.

ஷு லேஸ் போன்று

ஷு லேஸ் போன்று

தொப்புள் தெரிய குட்டி குட்டி க்ராப் டாப்ஸில் கலக்கலாய் போஸ் கொடுத்திருந்தார் நடிகை யாஷிகா ஆனந்த். அதோபோல் வெள்ளை நிற சேலை, கறுப்பு நிற ஷு லேஸ் போன்ற முன்பக்க டிசைனுடன் செம கிளாமர் போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்தார். அந்த போட்டோக்கள் லைக்ஸை குவித்தது.

கையை பற்றியப்படி..

கையை பற்றியப்படி..

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் தற்போது ஒரு போட்டோவை ஷேர் செய்து அலற விட்டுள்ளார். அதாவது பார் ஒன்றில் அமர்ந்துள்ளார் யாஷிகா ஆனந்த். அப்போது எதிரே அமர்ந்திருப்பவரின் கை அவரது கையை பிடித்து பற்றியப்படி உள்ளது.

டேட் என கேப்ஷன்

டேட் என கேப்ஷன்

யாஷிகா ஆனந்த வெட்கத்தில் சிரித்தப்படியே தனது ஒரு கையால் முகத்தை மூடியுள்ளார். அவர் இந்த போட்டோவுக்கு கொடுத்திருக்கும் கேப்ஷன்தான் விஷயமே. அந்த போட்டோவுக்கு டேட் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

யார் அந்த நபர்?

யார் அந்த நபர்?

இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், கையை பிடித்துக் கொண்டு இருக்கும் அந்த நபர் யார் என அறிய ஆர்வமாய் உள்ளனர். உங்களின் கையை பிடித்திருக்கும் அந்த நபர் யார் என்று கேட்டு வருகின்றனர்.

அவரா இவர்?

அவரா இவர்?

ஏற்கனவே நடிகை யாஷிகா ஆனந்த் பிரபல நடிகர் ஒருவரின் மகனுடன் காதல் உறவில் இருப்பதாக தகவல் வெளியானது. இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வெளியானது. இந்நிலையில் யாஷிகாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரா இது என்றும் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X