காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட தோழி.. சுயநினைவுடன் வாக்குமூலம் அளித்த யாஷிகா.. பரபரப்பு தகவல்!
சென்னை: கோர விபத்தில் படுகாயமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் சுயநினைவுடன் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Recommended Video
தமிழில் கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஸாம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன் மூலம் பெரும் பிரபலமானார். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் யாஷிகா.

வள்ளி செட்டி பவனி
இந்நிலையில் நேற்று முன்தினம் நண்பர்களுடன் புதுச்சேரி சென்றார் யாஷிகா ஆனந்த். அன்று இரவு சென்னை அவர்கள் சென்னை திரும்பினர். யாஷிகா கரை ஓட்டி வர, அவரது தோழி வள்ளிசெட்டி பவனி முன்னாள் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

சாலையில் கவிழ்ந்த கார்
யாஷிகாவின் நண்பர்கள் சையது மற்றும் அமீர் ஆகிய இருவரும் பின்னால் அமர்ந்திருந்தனர். மகாபலிபுரம் அருகே சூளேரிக்காடு என்ற இடத்தில் கார் வந்த போது, வலது பக்கமாக திருப்பியுள்ளார் யாஷிகா ஆனந்த். அப்போது சென்டர் மீடியனில் மோதிய கார் சாலையில் கவிழ்ந்தது.

தூக்கி வீசப்பட்ட தோழி
இதில் யாஷிகாவின் தோழி வள்ளிசெட்டி பவனி சீட் பெல்ட் அணியாததால் காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா படுகாயமடைந்தார். யாஷிகாவின் இடுப்பு, கை மற்றும் கால் எலும்புகள் முறிந்துள்ளன.

யாஷிகா குடிக்கவில்லை
தற்போது யாஷிகா ஆனந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் யாஷிகா ஆனந்த் குடித்துவிட்டு கார் ஓட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது.

சுயநினைவுடன் வாக்குமூலம்
அவர் சுய நினைவுடன் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ள தகவலும் வெளியாகியுள்ளது. யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்றும் தெரியவந்துள்ளது. இதனிடையே யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications