Yashika Anand: யாருக்கு கொடுத்து வச்சு இருக்கோ.. யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி போட்டோஸ்!

சென்னை: தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு ஆகிய படங்கள் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த யாஷிகா ஆனந்த்.2018 கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான விவகாரமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறினார்.தற்போது இன்ஸ்டாகிராம் குயினாக இருக்கும் இவர், இணையத்தில் அட்டகாசமான போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களின் ஹாட் பீட்டை எகிற வைத்துள்ளார்.

yashika anand instagram

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியில் மிரட்டும் யாஷிகா ஆனந்த்க்கு என்று தனி ரசிகர்கள் இருந்தனர் . பின் அதே கவர்ச்சியை பயன்படுத்தி சினிமாவில் வாய்ப்புகளை பெற்றார். பின் விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். சினிமாவில் காட்டிய கவர்ச்சியை டிவியில் இளசுகளின் தூக்கத்தை கெடுத்த யாஷிகாவின் ஓவர் கவர்ச்சியால் மிரண்டு போன பிக் பாஸ், பிக் பாஸ் வீட்டில் இனி புடவைதான் கட்டவேண்டும் என வினோத தண்டனையை கொடுத்தார்.

yashika anand instagram

தோழி உயிரிழந்தார்: பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த யாஷிகா, கடந்த 2021 ம் ஆண்டு மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் தனது நண்பர்களுடன் காரில் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த போது கார் நிலை தடுமாறி சாலை நடுவே இருக்கும் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். கார் ஓட்டிய யாஷிகாவிற்கு பலத்த காயமடைந்ததைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சையில் இருந்த யாஷிகா குணமடைந்து வர ஒருபுறம் ரசிகர்கள் யாஷிகாவை கடுமையாக விமர்சித்து வந்தனர். மேலும் விபத்தின் அடிப்படையில் யாஷிகா மீது, அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

yashika anand instagram

மீண்டு வந்தார்: எழுந்து நடக்கவே முடியாத நிலையில் இருந்த யாஷிகா, இறைவனின் அருளால் மீண்டும் பூரண குணமடைந்தார். குணமடைந்ததைத் தொடர்ந்து திரைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார். இவரின் கைவசம் இவன் தான் உத்தமன், ராஜ பீமா, சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு படம் என கணிசமான படங்களை வைத்து இருக்கிறார். எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக கடமை செய் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து ரிஷிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருந்தார்.

yashika anand instagram

கவர்ச்சி போஸ்: ஒரு பக்கம் சினிமா, ஒரு பக்கம் சோஷியல் மீடியா என எப்போதுமே பிஸியாக இருக்கும் யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராமில் தினம் தினம் ஏதாவது போட்டோக்களை ஷேர் செய்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர், ஒரு கவர்ச்சி போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த இணையவாசிகள், யாருக்கு கொடுத்து வச்சு இருக்கோ என ஏக்க பெருமூச்சு விட்டு லைக்குகளை மலைபோல குவித்து வருகின்றனர்

yashika anand instagram

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X