நடிகர் மகனுடன் ஊர் சுற்றும் பிரபல நடிகை.. போட்டிங்.. ஈட்டிங் அதகளம்.. லீக்கான டேட்டிங் போட்டோஸ்?
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் பிரபல நடிகர் ஒருவரின் மகனுடன் ஊர்சுற்றும் போட்டோக்கள் லீக்காகி வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகை யாஷிகா ஆனந்து இருட்டு அறையில் முரட்டு குத்து, ஸாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 2018ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள நடிகை யாஷிகா ஆனந்த் அவ்வப்போது தனது ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து தெறிக்க விட்டு வருகிறார்.

மகத்துடன் காதல்
நடிகை யாஷிகா ஆனந்த் படங்களில் நடித்து பிரபலமானதைக் காட்டிலும் தனது கிளாமர் போட்டோக்களால்தான் அதிக பிரபலமானார். அதோடு பல்வேறு சர்ச்சைகளுக்கும் ஆளானார் நடிகை யாஷிகா ஆனந்த். ஏற்கனவே காதலி இருக்கிறார் என்று தெரிந்தும் பிக்பாஸில் தன்னுடன் பங்கேற்ற சக போட்டியாளராக மகத்தை காதலித்தார்.

லைவில் லிப் லாக்
பின்னர் தனது தோழியான ஐஸ்வர்யா தத்தாவுடன் சமூக வலைதளத்தில் லைவில் பேசிய போது அவரது ஆண் நண்பர் ஒருவர் லைவ் நிகழ்ச்சியிலேயே அவருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் பிரபல நடிகரின் மகனுடன் ஊர் சுற்றும் போட்டோக்கள் வெளியாகியுள்ளது.

உமாபதி ராமையா
தமிழ் சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகராக இருப்பவர் தம்பி ராமையா. இவரது மகன் உமாபதி ராமையா. இவர் அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். கடைசியாக சேரனின் இயக்கத்தில் வெளிவந்த திருமணம் படத்தில் சுகன்யாவுக்கு தம்பியாக லீடிங் ரோலில் நடித்திருந்தார்.

போட்டிங்
இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த், உமாபதி ராமையாவுடன் ஊர் சுற்றும் போட்டோக்கள் வெளியாகியுள்ளது. யாஷிகா ஆனந்தும் உமாபதியும் ஹோட்டலில் அமர்ந்து சாப்பிடும் போட்டோக்கள் வெளியாகியுள்ளது. இதேபோல் இருவரும் போட்டிங் செல்லும் போட்டோக்களும் வெளியாகி இருக்கிறது.

காதலிக்கிறார்களா?
இதேபோல் மூட்டைகள் நிறைந்த வண்டியில் டூ வீலரில் செல்வது போன்று அமர்ந்து செல்லும் போட்டோக்களும் இடம் பெற்றுள்ளன. இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் காதலிக்கிறார்களா? டேட்டிங் சென்ற போட்டோக்களா இவை என கேட்டு வருகின்றனர். ஆனால் அவை ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோக்களா இல்லை அவர்கள் தனிமையில் இருக்கும் போது எடுத்த போட்டோக்களா என்ற தகவல் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











