அம்மாவா நடிக்க பதட்டப்பட்ட நடிகை.. யார் அந்த கிளாமர் டால்ன்னு தெரிஞ்சுக்கலாமா!
சென்னை : எஸ்ஜே சூர்யா, யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள கடமையை செய் படம் வரும் 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
முன்னதாக இந்தப் படம் ஜூன் 24ம் தேதி ரிலீசாகவிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது.
இந்தப் படத்தை வெங்கட் ராகவன் இயக்கியுள்ளார். கணேஷ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ரமேஷ் தயாரித்துள்ளார்.

கடமையை செய் படம்
நடிகர் எஸ்ஜே சூர்யா தனது மாநாடு, டான் படங்களின் வெற்றியை தொடர்ந்து நாயகனாக கடமையை செய் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். யாஷிகா ஆனந்த் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸ் கடந்த ஜூன் 24ம் தேதி திட்டமிடப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது.

ஆகஸ்ட் 12ம் தேதி ரிலீஸ்
படத்தை வெங்கட் ராகவன் இயக்கியுள்ளார். படத்தில் ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், மோகன் வைத்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கணேஷ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் இந்தப் படத்தை ரமேஷ் தயாரித்துள்ளார். இந்நிலையில் வரும் 12ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

21 வயதில் குழந்தையின் அம்மா
இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிடவுள்ள நிலையில் படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடந்துள்ளது. இதில் படக்குழுவினர் கலந்துக் கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் பேசிய படத்தின் நாயகி இந்தப் படத்தில் நடித்தபோது தனக்கு 21 வயது என்றும் அந்த வயதிலேயே ஒரு குழந்தையின் அம்மாவாக தான் படத்தில் நடித்ததாகவும் இதனால் மிகவும் பதற்றமாக உணர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

பதற்றத்திற்கு காரணங்கள்
மேலும் பிரபல நடிகர் எஸ்ஜே சூர்யாவுடன் இணைந்து நடித்ததும் தன்னுடைய பதற்றத்திற்கு மற்றொரு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். தன்னை நம்பி இதுபோன்ற வெயிட்டான கேரக்டரை கொடுத்த வெங்கட் ராகவனுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும் எஸ்ஜே சூர்யாவுடன் இணைந்து நடித்தது தினந்தோறும் பரிட்சை எழுதியதை போன்ற அனுபவத்தை கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

பரிட்சையில் பாஸ் செய்ய உதவி
ஆனால் இந்த பரிட்சைகளில் பாஸ் செய்ய தனக்கு மிகவும் உறுதுணையாக இயக்குநர் வெங்கட் இருந்ததாகவும் தினந்தோறும் தனக்கு அவர் நடிப்பு குறித்தும் அன்றைய தினத்தின் காட்சிகள் குறித்தும் சிறப்பாக விளக்கி தனக்கு உதவி செய்ததாக அவர் கூறியுள்ளார். கிளாமர் டால் என்ற இமேஜுடன் படங்களில் நடித்துவந்த தன்னை குடும்பத் தலைவியாக இந்தப் படத்தில் வெங்கட் தைரியமாக காட்டியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.


Click it and Unblock the Notifications











