விஜய்யின் அரசியல் வருகை.. பிரபல ஹீரோயின் என்ன சொல்லிருக்காங்கனு பார்த்தீங்களா பாஸ்
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அந்தக் கட்சி களமிறங்குகிறது. பாஜகவும், திமுகவும்தான் தன்னுடைய அரசியல் எதிரி என்பதை கட்சியின் முதல் மாநாட்டில் தெளிவுப்படுத்திவிட்டார் அவர். இதற்கிடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்திலும் நடித்துவருகிறார். அந்தப் படம்தான் அவரது கடைசி படம் என்று சொல்லப்படுகிறது.
சினிமாவில் மும்முரமாக நடித்துவந்த விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். இனி முழுக்க முழுக்க அரசியல்வாதியாக மாறப்போகும் விஜய் அதன் காரணமாக இன்னும் ஒரே ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்கிவருகிறார். படத்துக்கு ஜன நாயகன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. அடுத்த வருடம் ஜனவரி 9ஆம் தேதி அத்திரைப்படம் ரிலீஸாகும் என்று அறிவிப்பும் வந்துவிட்டது.
விமர்சன விஜய்: அரசியலுக்கு வந்திருக்கும் அவர் தன்னுடைய எதிரியாக திமுகவையும் பாஜகவையும் தேர்ந்தெடுத்திருக்கிறார். மேடைக்கு மேடை திமுக மீது காட்டமான விமர்சனங்களை முன்வைத்துவருகிறார். விஜய்யின் இந்த விமர்சனத்தை பார்த்த திமுகவினரோ விஜய்யின் அரசியல் அஜெண்டாவை பார்த்தால் பாஜகவின் பி டீம் போல் தெரிகிறார். கண்டிப்பாக இவரால் தமிழ்நாட்டுக்கு எந்த பிரயோஜனும் வரப்போவதில்லை என்றும் ஓபனாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
திமுகவின் பதிலடி: அதுமட்டுமின்றி விஜய்யின் பேசுச்க்கு பதிலடியும் கொடுத்துவருகிறார்கள். அதாவது ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் நிவாரண உதவிகளை வழங்கினார். ஆனால் பனையூரில் இருக்கும் தனது அலுவலகத்துக்கு மக்களை வரவழைத்து அதனை செய்தார். அது பெரும் விமர்சனத்தை சந்தித்தது. முக்கியமாக, 'அரசியலில் விஜய் Work From Home செய்கிறார்' என்றும் கிண்டல் செய்தார்கள். அதேபோல் விஜய்யின் பேச்சுக்களை வைத்தும் கடுமையாக திமுகவினர் ட்ரோல் செய்துவருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு தவெகவினரும் தகுந்த பதிலடியை கொடுத்துதான் வருகிறார்கள்.
புகழும் திரைத்துறை: விஜய்யின் அரசியல் வருகையை ஒருதரப்பினர் விமர்சனம் செய்தாலும்; திரைத்துறையிலிருந்து அவருக்கு சில ஆதரவு குரல்களும் எழத்தான் செய்கின்றன. அதாவது இப்போது விஜய்தான் கோலிவுட்டின் டாப் கமர்ஷியல் ஹீரோக்களில் ஒருவர் என்பது அனைவருக்குமே தெரியும். அவரது ஒவ்வொரு படமும் அசால்ட்டாக 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலிக்கிறது. மேலும் அவருக்கு கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய்வரை ஒரு படத்துக்கு சம்பளம் வாங்குகிறார் என்ற பேச்சுக்களும் ஓட ஆரம்பித்தன.

தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது அதனை வேண்டாமென்று தூக்கி எறிந்துவிட்டு அரசியலுக்கு வந்த விஜய்யை பாராட்டத்தான் வேண்டும். விஜய் தைரியமான முடிவை எடுத்திருக்கிறார். வேறு யாரும் அப்படி எடுக்கமாட்டார்கள் என சமுத்திரகனி உள்ளிட்டோர் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். அதேசமயம் அவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்றும் திரைத்துறையினரே கோரிக்கைகள் வைக்க ஆரம்பித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
யாஷிகா ஆனந்த் பேட்டி: இந்நிலையில் திருச்சியில் ஒரு விழாவில் கலந்துகொண்ட நடிகை யாஷிகா ஆனந்த்திடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர், "அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் சாருக்கு என்னுடைய வாழ்த்துகள். எதுவுமே இங்கு எளிது கிடையாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு விஷயத்துக்காக மற்றொரு விஷயத்தை விட்டுக்கொடுத்துதான் ஆக வேண்டும். அரசியலுக்காக அவர் சினிமாவை விட்டு வருவது நல்ல விஷயம்தான்" என்றார்.


Click it and Unblock the Notifications











