அப்பாடா... 3 மாதங்களுக்கு பிறகு எழுந்து நடக்க தொடங்கிய யாஷிகா ஆனந்த்.. வைரலாகும் வீடியோ!

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் 3 மாதங்களுக்கு பிறகு படுக்கையில் இருந்து எழுந்து நடக்கும் பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2,ஸாம்பி மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பல படங்களில் கமிட்டட்

பல படங்களில் கமிட்டட்

இதில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் அவரது நடிப்பில் கடைசியாக வெளியானது. இதனை தொடர்ந்து இவன்தான் உத்தமன், ராஜ பீமா, கடமையை செய், பாம்பாட்டம், சல்ஃபர், பெஸ்டி ஆகிய படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார் யாஷிகா.

கார் விபத்தில் சிக்கிய யாஷிகா

கார் விபத்தில் சிக்கிய யாஷிகா

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்துக்குள்ளானது. நடிகை யாஷிகா ஆனந்த் புதுச்சேரியில் இருந்து இரவு சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். இரவு 11 மணி வாக்கில் மகாபலிபுரம் அருகே வந்த போது யாஷிகா ஓட்டி வந்த கார் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

பலத்த காயமடைந்த யாஷிகா

பலத்த காயமடைந்த யாஷிகா

இதில் யாஷிகா ஆனந்தின் தோழி வள்ளி செட்டி பாவனி காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் படுகாயமடைந்தனர். யாஷிகாவின் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு இடுப்பில் எலும்பு முறிவு என பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்தார்.

அறுவை சிகிச்சைகள்

அறுவை சிகிச்சைகள்

அப்பகுதி மக்களால் காப்பாற்றப்பட்ட யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து நடிகை யாஷிகா ஆனந்துக்கு கால், இடுப்பு, வயிறு என பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

காலில் கட்டுடன் இருந்த யாஷிகா

காலில் கட்டுடன் இருந்த யாஷிகா

இதனை தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார் நடிகை யாஷிகா ஆனந்த். காலில் கட்டுடன் அவர் வெளியிட்ட போட்டோக்கள் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

குழந்தையை போல் ஒவ்வொரு அடியாக

குழந்தையை போல் ஒவ்வொரு அடியாக

இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் எழுந்து வாக்கர் உதவியுடன் நடக்கும் பயிற்சியை மேற்கொண்டுள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்து. மருத்துவர்கள் உதவியுடன் படுக்கையில் இருந்து எழுந்து குழந்தையை போல் ஒவ்வோரு அடியாக பேபி ஸ்டெப் வைத்து நடக்கிறார் யாஷிகா ஆனந்த்.

95 நாட்கள் நம்பிக்கை

95 நாட்கள் நம்பிக்கை

மேலும் அந்த போட்டோவுக்கு, 95 நாட்கள் நம்பிக்கை, பிரார்த்தனை மற்றும் வலுவான விருப்பம் !! எந்த ஆதரவும் இல்லாமல் மீண்டும் என் காலில் வலுப்பெற்று மீண்டும் நடப்பேன் என்று நம்புகிறேன் . என்னை நன்றாக கவனித்துக் கொண்ட டாக்டர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

விரைவில் நலம் பெற

விரைவில் நலம் பெற

யாஷிகாவின் இந்த வீடியோவை பார்த்த சனம் ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் நடிகை யாஷிகா ஆனந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் பழையப்படி நீங்கள் திரும்பி வருவீர்கள் என்றும் தெரிவித்து வருகின்றனர். இதேபோல் ஏராளமான ரசிகர்களும் யாஷிகா ஆனந்த் விரைவில் நலம் பெற வாழ்த்து தெரிவித்துள்ளனர். யாஷிகா ஆனந்தின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X