நான் எப்பவுமே அவரு ஃபேன்தான்.. அவருக்குகூட பேக்கிரவுண்ட்ல நடிச்சாலே போதும்.. யாஷிகா ஆனந்த் தடாலடி!

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் தனக்கு பிடித்த நடிகர் யார் என மனம் திறந்து பேசியிருக்கிறார்.

Recommended Video

Samantha Pregnant? Walks out from KRK | Nazriya Pet | Samyuktha Hedge Workout | Yashika Dream

நடிகை யாஷிகா ஆனந்த் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார். அடுத்தடுத்து துருவங்கள் பதினாறு, பாடம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அவரது நடிப்பில் வெளியான அடல்ட் படமான இருட்டு அறையில் முரட்டு குத்து படம் பெரும் விமர்சனத்துக்குள்ளானது. தொடர்ந்து மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நல்ல பெயர்

நல்ல பெயர்

யாஷிகா ஆனந்த் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். என்னதான் படத்தில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். அதில் மிகவும் முதிர்ச்சியாகவும் நிதானமாகவும் அவர் நடந்து கொண்ட விதம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.

கவர்ச்சி போட்டோக்கள்

கவர்ச்சி போட்டோக்கள்

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் வாய்ப்புக்காக வேண்டி கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். கவர்சியில் ஒவர் தாராளம் காட்டி கிறங்கடித்து வருகிறார் யாஷிகா ஆனந்த். எப்போது முன்னழகையும் தொடையையும் காட்டி கிக்கேற்றி வருகிறார்.

யாஷிகா ஆனந்த் வீடியோ

யாஷிகா ஆனந்த் வீடியோ

அவரது போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் படு மோசமாக திட்டி தீர்த்து வருகின்றனர். ஆனாலும் அடங்காத யாஷிகா ஆனந்த் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த், தனது டிவிட்டர் பக்கத்தில் நேர்காணல் அளித்த வீடியோ ஒன்றை ஷேர் செய்திருக்கிறார்.

பேக் கிரவுண்ட்

பேக் கிரவுண்ட்

அதில் உங்களுக்கு எந்த நடிகர் பிடிக்கும் என்று தொகுப்பாளர் கேட்க அதற்கு நான் எப்போதுமே தல ஃபேன்தான் என்று கூறுகிறார். மேலும் அஜித் படத்தில் பேக்கிரவுண்டில் நடித்தாலே போதும் என்றும் நடிகை யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. யாஷிகா ஆனந்த்தின் இந்த பதிலை அஜித் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

பெருமை கொள்வார்

யாஷிகா ஆனந்தின் இந்த வீடியோவை பார்த்த இந்த ரசிகர், உங்களிடம் அபரிமிதமான திறமை இருக்கிறது மற்றும் சரியான அணுகுமுறையும் கொண்டுள்ளீர்கள். ஒரு நாள் தல அஜித் உங்களை போன்ற ரசிகரால் பெருமை கொள்வார் என கூறியுள்ளார். இதேபோன்று வலிமை என்ற ஹேஷ்டேக்கையும் அஜித் ரசிகர்கள் யாஷிகாவின் வீடியோவுக்கு பதிலாக தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X