காலில் பெரிய கட்டு.. படுத்த படுக்கையாக ஹாஸ்பிட்டலில் யாஷிகா.. பகீர் கிளப்பும் லேட்டஸ்ட் போட்டோ!

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் காலில் பெரிய கட்டுடன் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக சிகிச்சை பெறும் போட்டோ வெளியாகி பதற வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் சீசன் 2 மூலம் பிரபலமான இவர் பல படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி அன்று நடிகை யாஷிகா தனது தோழி பவானி மற்றும் இரண்டு ஆண் நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சென்றார்.

சென்டர் மீடியனில் மோதிய கார்

சென்டர் மீடியனில் மோதிய கார்

அமெரிக்காவில் இருந்து திரும்பிய தனது தோழி பவானிக்கு விருந்து கொடுக்க நண்பர்களுடன் புதுச்சேரி சென்றார் யாஷிகா. இரவு விருந்தை முடித்து விட்டு நள்ளிரவு சென்னை திரும்பினர். அப்போது யாஷிகா ஆனந்த் கார் ஓட்டி வந்தார். எதிர்பாராத விதமாக கார் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

தூக்கி வீசப்பட்டு பலியான தோழி

தூக்கி வீசப்பட்டு பலியான தோழி

இந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்தின் தோழி பவானி காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் பலத்த காயமடைந்த யாஷிகா ஆனந்த் உட்பட 3 பேரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

யாஷிகா ஆனந்துக்கு பலத்த காயம்

யாஷிகா ஆனந்துக்கு பலத்த காயம்

இதில் யாஷிகா ஆனந்துக்கு உடம்பில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. யாஷிகா ஆனந்த் எழுந்து நடமாடவே 6 மாதங்கள் ஆகும் என்றும் தகவல் வெளியானது.

இன்ஸ்டா பக்கத்தில் யாஷிகா அப்டேட்

இன்ஸ்டா பக்கத்தில் யாஷிகா அப்டேட்

இந்நிலையில் விபத்து குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு அப்டேட் செய்திருந்தார் யாஷிகா ஆனந்த். அப்போது தான் குடித்துவிட்டு கார் ஓட்டியதாக தவறான தகவல் பரப்புவோருக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும் இந்த விபத்து ஒரு நொடியில் ஏற்பட்ட கவனக்குறைவால் தான் முழுக்க முழுக்க நடந்தது என்றும் தெரிவித்திருந்தார்.

வாழ்நாள் முழுக்க குற்ற உணர்ச்சி

வாழ்நாள் முழுக்க குற்ற உணர்ச்சி

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார் யாஷிகா. மேலும் மற்றொரு பதிவில், தனது தோழியின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்த யாஷிகா வாழ்நாள் முழுவதும் அந்த குற்றவுணர்ச்சி தனக்கு இருக்கும் என்று கூறியுள்ளார்.

புதிய பட வாய்ப்புகள் கிடைக்காது

புதிய பட வாய்ப்புகள் கிடைக்காது

இப்படி ஒரு கொடுமையான விபத்தில் இருந்து தன்னை காப்பாற்றியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதா அல்லது வாழ்நாள் முழுக்க தனது தோழியை பிரித்ததற்காக கடவுளை குற்றம் சொல்வதா என்றும் தெரியவில்லை என்றும் கூறியிருந்தார். தனக்கு இனிமேல் புதிய பட வாய்ப்புகள் கிடைக்காது என்றும் விரக்தியாக பதிவிட்டிருந்தார்.

ஏற்பட்டுள்ள இழப்புக்கு இது ஒன்றுமே இல்லை

ஏற்பட்டுள்ள இழப்புக்கு இது ஒன்றுமே இல்லை

மேலும் தனது முகத்தில் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அதிர்ஷ்டவசமாக தனக்கு கிடைத்த மறுபிறவி இது என்றும் கூறியிருந்தார். கடவுள் தன்னை தண்டித்து விட்டதாகவும் கூறியிருந்தார். மேலும் தனக்கு ஏற்பட்டுள்ள இழப்புடன் ஒப்பிடுகையில் இது ஒன்றுமே இல்லை என்றும் கண்ணீர் விட்டார் யாஷிகா. யாஷிகாவின் பதிவை பார்த்த பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.

இயற்கை உபாதைகளை கழிக்க கூட

இயற்கை உபாதைகளை கழிக்க கூட

இடுப்பு, கால், வயிறு ஆகிய இடங்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், படுத்த படுக்கையாக உள்ளார் யாஷிகா. இதனால் இயற்கை உபாதைகளை கழிக்க கூட அவருக்கு மற்றவர்களின் உதவி தேவைப் படுகிறது. இந்நிலையில் யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோ வெளியாகியுள்ளது.

காலில் பெரிய கட்டுடன் யாஷிகா

காலில் பெரிய கட்டுடன் யாஷிகா

இதில் இடது காலில் பெரிய கட்டுடன் உள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த். மேலும் கைகளில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு வருகிறது. பிபி, பல்ஸ் போன்றவற்றை கண்காணிக்கும் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சையில் பெட்டில் படுத்த படுக்கையாக கிடக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.

கண்ணீர் விடும் ரசிகர்கள் - பிரார்த்தனை

கண்ணீர் விடும் ரசிகர்கள் - பிரார்த்தனை

யாஷிகாவின் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பதறியுள்ளனர். ரசிகர்கள் பலரும் யாஷிகாவின் நிலையை கண்டு கண்ணீர் விட்டுள்ளனர். மேலும் போட்டோவை பார்த்த பலரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம் என்றும் பதிவிட்டுள்ளனர். யாஷிகாவின் இந்த போட்டோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

ஏற்கனவே ஒரு முறை விபத்து

ஏற்கனவே ஒரு முறை விபத்து

யாஷிகாவின் பழைய போட்டோவையும் தற்போதைய போட்டோவையும் ஒப்பிட்டு ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். ஏற்கனவே ஒருமுறை யாஷிகா ஆனந்த் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியானது. ஆனால் அதனை மறுத்த யாஷிகா, ஃபிரண்டை காப்பாற்றவே விபத்து நடந்த இடத்திற்கு சென்றதாக கூறினார்.

Recommended Video

Yashika Anand First EXCLUSIVE statement | 5 மாசம் நடக்க முடியாது | Balaji Murugadoss
உரிமம் பறிமுதல் - வழக்குப் பதிவு

உரிமம் பறிமுதல் - வழக்குப் பதிவு

இந்நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர் மீது விபத்து மூலம் உயிரிழப்பை ஏற்படுத்துதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படங்களின் நிலை கேள்வி குறி

படங்களின் நிலை கேள்வி குறி

இதனிடையே நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது இவன் தான் உத்தமன், ராஜ பீமா, கடமையை செய், பாம்பாட்டம், சல்பர் ஆகிய படங்களில் நடித்து வந்தார். தற்போது யாஷிகா ஆனந்த் விபத்தில் சிக்கி நடமாட முடியாத நிலையில் உள்ளார். அவர் எழுந்து நடமாட இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்பதால் அந்த படங்களின் நிலையும் கேள்வி குறியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X