Just In
- 5 min ago
திரும்பிச் செல்லுங்கள்.. படப்பிடிப்பில் விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டம்.. ஷூட்டிங் கேன்சல்!
- 13 min ago
குருவாயூரில் சாமி தரிசனம் செய்த சோம்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன்முறையாக வெளியிட்ட வீடியோ!
- 1 hr ago
நல்லா கேட்டுக்கோங்க.. அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது.. யுவன் சங்கர் ராஜா விளக்கம்!
- 1 hr ago
ரம்யா பாண்டியனை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்.. கடுப்பான அனிதா.. என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
Don't Miss!
- News
ஒரு மனுச பொய் சொல்லலாம்.. ஆனால் ஏக்கர் கணக்குல பொய் சொல்லக்கூடாது.. டிரம்ப் பேசிய 30573 பொய்கள்!
- Sports
கோவாவை சமாளித்த கேரளா பிளாஸ்டர்ஸ்.. டிராவில் முடிந்த போட்டி!
- Lifestyle
தலைசுற்ற வைக்கும் உலகின் கொடூரமான பாலியல் ஆசைகள்... இப்படிலாம் கூடவா ஆசைப்படுவாங்க...!
- Automobiles
இந்தியாவிலேயே இந்த அம்சத்தை பெறும் முதல் ஹூண்டாய் க்ரெட்டா இதுதான்.. அப்படி என்ன அம்சம் அது? வாங்க பார்ப்போம்!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முத்தக் காட்சியை ரிகர்சல் பார்க்கலாமா என கேட்ட இயக்குநர்.. நடிகை ஜரீன் கான் பரபர!
மும்பை: தான் சினிமாவுக்கு வந்த புதிதில் முத்தக்காட்சி ஒன்றிற்காக இயக்குநர் ஒருவர் தன்னிடம் ஒத்திகை பார்க்கலாமா என்று கேட்டதாக நடிகை ஜரீன் கான் தெரிவித்துள்ளார்.
நடிகை ஜரீன் கான் 2010 ஆம் ஆண்டு வெளியான சல்மான் கானின் வீர் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து இந்தி மற்றும் பஞ்சாபி படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் நடிகர் நகுல் நடிப்பில் வெளியான, நான் ராஜாவாகப்போகிறேன் படத்திலும் நடித்திருக்கிறார் ஜரீன் கான். தற்போது பஞ்சாபி மொழியில் உருவாகியிருக்கும் டாக்கா படத்தின் ரிலீஸ் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
யார் அனுதாபத்துக்காக நடிக்கிறாங்க? நீங்கவிட்ட ரீலுக்கு அர்த்தம் என்ன? தர்ஷனை பிராண்டும் நெட்டிசன்ஸ்!

படுக்கைக்கு அழைக்கும் பழக்கம்
இந்நிலையில் பிங்க் வில்லா ஊடகத்திற்கு ஜரீன் கான் பேட்டியளித்துள்ளார். அதில் தான் சினிமா இன்டஸ்ட்ரீக்கு வந்த புதிதில் தனக்கு நேர்ந்த அனுபவங்களையும் வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டார்.

ஒத்திகை கேட்ட இயக்குநர்
அப்போது ஒரு படத்தில் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டியிருந்ததாக கூறிய ஜரீன் கான், அதற்காக அந்த படத்தின் இயக்குனர், தன்னுடன் முத்தக்காட்சியை ஒத்திகை பார்க்க வேண்டும் என அழைத்ததாகவும் கூறினார். மேலும் முத்தக்காட்சியை தன்னுடன் ஒத்திகை பார்த்துக்கொண்டால்தான் தான் காட்சியின் போது தயக்கம் இருக்காது என்று அந்த இயக்குநர் கூறியதாகவும் ஜரீன் கான் தெரிவித்துள்ளார்.

ரிகர்சல் செய்வதில்லை
ஆனால் அதற்கு தான் உடன்படவில்லை என்றும், தான் எந்த முத்தக்காட்சி நான் ரிகர்சல் செய்வதில்லை என்று கூறிவிட்டதாகவும் ஜரீன் கான் தனது பேட்டியில் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்தியானார்
அண்மையில் ஜரீன் கான் வெளியிட்ட ஒரு போட்டோவால் சமூக வலைதளங்களில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டார். இதற்காக அவர் அளித்த பதிலால் ஊடகங்களில் தலைப்புச் செய்தியானார். அதாவது, சமீபத்தில் ஜரீன் கான், வெளியிட்ட ஒரு புகைப்படத்தில் வயிற்றில் கோடுகள் தென்பட்டது.

வெட்கமே இல்லையா?
அதைக்கண்ட நெட்டிஸன்கள் வயிற்றில் கோடுகளுடன் உங்கள் படத்தை வெளியிட்டுள்ளீர்களே, உங்களுக்கு கொஞ்சமும் வெட்கமில்லையா? என்று கேட்டனர். அதைக்கண்டு கோபம் அடைந்த ஜரீன் தக்க பதிலடி கொடுத்தார்.

வேறு எப்படி இருக்கும்?
அதாவது, எனது புகைப்படம் ஃபோட்டோஷாப் செய்யப்படாமல் இருக்கும்போது வேறு எப்படி இருக்கும்? நான் எப்போதுமே உண்மையானவளாக இருக்க விரும்புகிறேன். என் குறைபாடுகளை மூடிமறைப்பதை விட பெருமையுடன் ஏற்றுக்கொண்டவளாக இருக்கிறேன்.

மீண்டும் தலைப்புச் செய்தி
50 கிலோ எடையை இழந்த ஒரு நபரின் விஷயத்தில் வயிற்றில் இதுபோன்ற குறைகள் இயற்கையானவை என ஜரீன் குறிப்பிட்டார். அவரது இந்த காட்டமான பதிலுக்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இயக்குநர் ஒருவரை பற்றி கூறி தற்போது மீண்டும் தலைப்புச் செய்தியாகியுள்ளார் ஜரீன் கான்.