கிறிஸ்துமஸ்.. சான்டா லுக்கில் நம்ம ராய் லட்சுமி.. வேற லெவல் கொண்டாட்டத்தில் பிரபல நடிகைகள்!
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகமெங்கும் கொணாடப்பட்டு வருகிறது.
Recommended Video
இதையடுத்து, பிரபல நடிகைகள் கிறிஸ்துமஸ் மரம் அமைத்தும் சாண்டா லுக்கிலும் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

சான்டா தொப்பி
நடிகை ராய் லட்சுமி, சான்டா தொப்பி அணிந்து ஸ்டைலாக செல்ஃபி எடுத்து வெளியிட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். கூடவே சான்டாகிளாஸ் வருகிறார் என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தி இருக்கிறார். இதற்கு ஏராளமான லைக்ஸ்களும் கமென்ட்களும் விழுந்துள்ளன.

கிறிஸ்துமஸ் ட்ரீ
சிம்பு, ஶ்ரீகாந்துடன் நடித்துள்ள மஹா படத்தை அதிகம் எதிர்பார்க்கும் நடிகை ஹன்சிகாவும் தனது வீட்டில் கிறிஸ்துமஸ் ட்ரீ அமைத்துள்ளார். இந்த கிறிஸ்துமஸ், அமைதி, அன்பு மற்றும் ஏராளமான ஆசிர்வாதங்களுடன் அமையட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

ஸ்டைலான போஸ்
நடிகை மெளனி ராய், ஸ்பெஷலான கிறிஸ்துமஸ் ட்ரீ அமைத்துள்ளார். அட்டகாசமாகவும் அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ட்ரீயின் அருகில் அமர்ந்து ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கிறார், மெளனி ராய். அருகில் சான்டா தொப்பி இருக்கிறது. இதையடுத்து அவருக்கும் பல நெட்டிசன்ஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

சினேகா உல்லால்
நடிகை சினேகா உல்லாலும் சான்டாவாக மாறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு செல்ல பூனைக்குட்டியை கொஞ்சி முத்தமிடுகிறார். கூடவே கிறிஸ்துமஸ் ஸ்டாருடன் போஸ் கொடுத்துள்ளார். பல நெட்டிசன்ஸ் அவரிடம், சான்டாவிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்டுள்ளனர்.

கிறிஸ்துமஸ் ஸ்பிரிட்
நடிகை பிரியங்கா சோப்ரா கிறிஸ்துமஸ் ஸ்பிரிட் என்று தனது கணவர் நிக் ஜோனாஸுடன் கடும் குளிரில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை லட்சக்கணக்காவர்கள் லைக் செய்துள்ளனர். பலர் அவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

ஏராளமான லைக்ஸ்
நடிகை அனு இம்மானுவேல், அமைத்துள்ள கிறிஸ்துமஸ் மரத்துக்கு ஏராளமான லைக்ஸ். நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். நடிகைகளின் இந்த சான்டா லுக் மற்றும் கிறிஸ்துமஸ் ட்ரீ புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











