ஷகீலாவின் சுயசரிதை படத்தில் நடிக்கணுமா?: தெறித்து ஓடும் நடிகைகள்
சென்னை: கவர்ச்சி நடிகை ஷகீலாவின் சுயசரிதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படத்தில் நடிக்க முன்னணி நடிகைகள் தயங்குகிறார்களாம்.
கவர்ச்சி நடிகை ஷகீலா சுயசரிதை எழுதியுள்ளார். அதில் தான் கவர்ச்சியில் மலையாள திரை உலகை ஆண்டது முதல் முன்னணி ஹீரோக்கள் தன்னை பார்த்து மிரண்டது வரை அனைத்தையும் எழுதியுள்ளார்.
இதனால் அவருக்கு சிலர் மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார் ஷகீலா.

மம்மூட்டி, மோகன்லால்
கவர்ச்சியில் டாப் கியரில் சென்றபோது தனது படங்களை வைத்து முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன்லாலின் படங்களை பப்படமாக்கியது பற்றியும் ஷகீலா தனது சுயசரிதையில் எழுதி உள்ளாராம்.

ஷகீலா படம்
ஷகீலாவின் சுயசரிதையை வைத்து படம் எடுக்கவிருக்கிறார்கள். இதில் ஷகீலாவாக நடிக்க முன்னணி நடிகைகளை நடிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.

ஆள விடுங்க
முன்னணி நடிகைகளோ ஷகீலாவாக நடிக்க மறுத்து ஓடுகிறார்களாம். ஒரு காலத்தில் ஷகீலாவின் படம் ரிலீஸாகிறது என்றால் மலையாள திரை உலகின் முன்னணி நடிகர்கள் கூட தங்கள் படங்களை ரிலீஸ் செய்ய அஞ்சுவார்கள். அப்படி இருக்கையில் ஷகீலாவாக நடித்தால் கவர்ச்சியில் தாராளம் காட்ட வேண்டுமே.

விருது ஆசை
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த வித்யா பாலனுக்கு தேசிய விருது கிடைத்தது. அதே போன்று ஷகீலாவின் படத்தில் நடித்தாலும் விருது நிச்சயம் என்று நடிகைகளிடம் கூறி வருகிறார்களாம்.

அஞ்சலி
சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார் அஞ்சலி. இந்நிலையில் அவர் ஷகீலாவாக நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











