ஜெய் கூட நடிக்கணுமா?: அலறியடித்து ஓடும் நடிகைகள்

By Siva

சென்னை: ஜெய்யுடன் ஜோடி சேர்ந்தால் தங்கள் கெரியர் அம்பேலாகிவிடும் என்று நடிகைகள் அஞ்சுகிறார்களாம்.

அஞ்சலி ஜெய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இதையடுத்து அவர்களுக்குள் காதல் என்று கோடம்பாக்கம் முழுவதும் பேச்சாக கிடந்தது. நான் யாரையும் காதலிக்கவில்லை ஜெய் விளம்பரத்திற்காக இப்படி செய்தியை பரப்புகிறார் என்று அஞ்சலி குற்றம் சாட்டினார்.

மேலும் இனி ஜெய்யுடன் சேர்ந்து நடிக்கவே போவது இல்லை என்றும் அஞ்சலி தெரிவித்தார்.

சித்தி பிரச்சனை

சித்தி பிரச்சனை

காதல் கிசுகிசு பரவிய நேரத்தில் அஞ்சலிக்கும், அவரது சித்திக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அவர் தலைமறைவானார். பின்னர் அவராக வந்து காவல் நிலையத்தில் ஆஜர் ஆனார். இதையடுத்து அவர் கோலிவுட் பக்கமே வராமல் ஆந்திராவிலியே உள்ளார்.

நஸ்ரியா

நஸ்ரியா

திருமணம் என்னும் நிக்காஹ் படத்தில் நடிக்கையில் ஜெய்க்கும், நஸ்ரியாவுக்கும் செம காதல் என்று செய்திகள் வந்தன. இருவரும் படப்பிடிப்பில் மிகவும் நெருக்கமாக இருந்ததாக கூறப்பட்டது.

தொப்புள்

தொப்புள்

ஜெய்யுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய நஸ்ரியா நய்யாண்டி படத்தில் தொப்புள் காட்சி விவகாரத்தை பெரிதாக்கி காவல் நிலையம் வரை சென்றார். பின்னர் இயக்குனரும் அவரும் சமாதானம் ஆகிவிட்டனர். தொப்புள் பிரச்சனையை அடுத்து நஸ்ரியாவை ஒப்பந்தம் செய்ய கோடம்பாகத்தினர் அஞ்சுகிறார்கள்.

திருமணம்

திருமணம்

நஸ்ரியா நடிக்க வந்த வேகத்தில் பிரபலம் ஆனார். தற்போது அதே வேகத்தில் திருமணமும் செய்துகொள்ளவிருக்கிறார். அவருக்கும், மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது. திருமணத்திற்கு பிறகு அவர் நடிப்பாரா என்பது தெரியவில்லை.

ஜெய்

ஜெய்

ஜெய்யுடன் நடித்தால் முதலில் அவருடன் காதல் அடுத்து ஏதாவது பிரச்சனையில் சிக்கி காணாமல் போய்விடுவோம் என்று நடிகைகள் அஞ்சுகிறார்களாம். இதனால் ஜெய்யுடன் நடிக்க கேட்டால் ஆளை விடுங்க சாமி என்று ஓடுகிறார்களாம்.

நடிகைகள்

நடிகைகள்

ஜெய்யுடன் தற்போது நடித்து வரும் நடிகைகள் அவர் சிரித்து பேசினால் எங்கே தங்களையும் சேர்த்து காதல் கிசுகிசு வந்துவிடுவோமோ என்று அஞ்சுகிறார்களாம். இதனால் ஜெய் சிரித்துப் பேசினால் கூட நடிகைகள் வேண்டா வெறுப்பாகவே பேசுகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X