டிரெண்டாகும் #Challenge Accepted..இது புதுசால்ல இருக்கு.. கருப்பு வெள்ளைக்கு மாறும் ஹீரோயின்கள்!

By

சென்னை: சமூக வலைதளங்களில் இப்போது புதிய ஹேஷ்டேக்கை, பிரபல நடிகைகள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஏதாவது ஒரு சேலஞ்ச் டிரெண்டாகும். நடிகர், நடிகைகள் அந்த சவாலை ஏற்பார்கள்.

அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு, அதை மற்றவர்களை செய்ய சொல்வார்கள்.

 லாக்டவுன் காரணமாக

லாக்டவுன் காரணமாக

இது ஒரு வகை ஜாலி விளையாட்டு. கொரோனா லாக்டவுன் காரணமாக, படப்பிடிப்புகள் இல்லை என்பதால் நடிகர், நடிகைகள் வீட்டில் இருக்கின்றனர். கடந்த 4 மாதங்களாக வீட்டில் இருக்கும் அவர்கள் அடிக்கடி இதுபோன்ற சவால்களை டிரெண்ட் செய்வார்கள். அது பரபரப்பாகும். வீட்டை சுத்தம் செய்வது, தலைகீழாக நின்று டிசர்ட்டை அணிவது, மரக்கன்று நடுவது என்பது உட்பட பல சேலஞ்ச்-கள் வந்து போயின.

காமெடியான சவால்கள்

காமெடியான சவால்கள்

தலையணையை கட்டிக் கொண்டு இருப்பது போன்ற சில காமெடியான சவால்களும் டிரெண்டாவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக, சில நடிகைகள், கருப்பு, வெள்ளை புகைப்படங்களை தங்கள் இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகின்றனர். திடீரென இப்படி பதிவிடுவது ரசிகர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியது. என்ன காரணம் என்பது தெரியாமல் தவித்து வந்தனர்.

கருப்பு, வெள்ளை

கருப்பு, வெள்ளை

சமீபத்தில் நடிகை சமந்தா, தியா மிர்ஸா உட்பட பல நடிகைகள் இப்படி கருப்பு, வெள்ளை புகைப்படங்களை வெளியிட்டு #Challenge Accepted என்ற ஹேஷ்டேக்கையும் பதிவு செய்திருந்தனர். கூடவே அவர்களுக்கு நெருக்கமான பெண்களுக்கும் டேக் செய்திருந்தனர். பெண்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் விதமாகவும் பெண்களுக்கு அதிகாரம், பெண்களுக்குப் பெண்களின் ஆதரவு என்ற அடிப்படையிலும் உலகம் முழுவதும் இந்த ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

நடிகை எமி ஜாக்சன்

நடிகை எமி ஜாக்சன்

அதன் அப்படிடையிலேயே நம்மூர் நடிகைகளும் கருப்பு, வெள்ளை புகைப்படங்களை வெளியிட்டு மற்றவர்களுக்கு டேக் செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை எமி ஜாக்சனும் #Challenge Accepted என்ற ஹேஷ்டேக்கில் கருப்பு, வெள்ளை புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். செம கிளாமராக இருக்கும் இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தை லட்சக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.

வைபவி ஷாண்டில்யா

வைபவி ஷாண்டில்யா

கூடவே #iacceptthechallenge என்ற ஹேஷ்டேக்கும் உலகம் முழுவதும் டிரெண்டாகி வருகிறது. பல நடிகைகள் இந்த ஹேஷ்டேக்கில் கருப்பு வெள்ளை போட்டோக்களை பதிவு செய்து வருகின்றனர். நடிகை வைபவி ஷாண்டில்யா வெளியிட்டுள்ள பதிவில், உலகில் உள்ள அற்புதமான அனைத்துப் பெண்களுக்கும், புயலுக்கு மேலே எழுந்து செல்லுங்கள். சூரிய ஒளியை காண்பீர்கள் என்று கூறியுள்ளார்.

ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே

இவர் தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து, கேப்மாரி, சர்வர் சுந்தரம் உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார். இதையடுத்து நடிகை ஜான்வி கபூர், ஸ்ரத்தா தாஸ், நடிகை ராதிகா ஆப்தே, விமலா ராமன், சினேகா உல்லால், சோனம் கபூர் உள்பட பல நடிகைகள் இப்படி கருப்பு, வெள்ளை புகைப்படங்களை வெளியிட்டு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X