குடும்ப பாங்காக நடிக்கும் நடிகைகள் கவர்ச்சி ரூட்டுக்கு மாறுகிறார்கள்.. இயக்குநர் பேரரசு வேதனை

பொன்னியின் செல்வன் ஒரு படம் அல்ல, அது ஒரு சவால். எம்ஜிஆர், கமல் முயற்சித்து முடியாமல் போனதை, மணிரத்னம் சாதித்திருக்கிறார் என பேரரசு தெரிவித்துள்ளார்.

ஆரகன் பட நாயகியை பற்றி குறிப்பிட்டு பேசிய இயக்குநர் பேரரசு ஹீரோயின் குடும்பப்பாங்காக இருக்கிறார், கவர்ச்சி பக்கம் தாவி விடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்.

குடும்பப்பாங்காக நடிக்கும் பல நடிகைகள் சோசியல் மீடியாவில் கவர்ச்சியாக தங்களது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.. இதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ஐட்டம் டான்ஸ் நடிகைகள் பிழைப்பை கெடுத்த நவீன ஹீரோயின்கள்

ஐட்டம் டான்ஸ் நடிகைகள் பிழைப்பை கெடுத்த நவீன ஹீரோயின்கள்

தமிழ் திரையுலகில் அதன் ஆரம்ப கட்டங்களில் கதாநாயகிகள் தனியாக இருப்பார்கள். இன்றைய வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் ஐட்டம் டான்ஸ் ஆட தனியாக நடிகைகள் இருந்தார்கள். ஆனால் காலம் மாற மாற அதிக அளவில் வட மாநில நடிகைகள், அண்டை மாநில நடிகைகள் வரவு அதிகரிக்க அவர்களே கவர்ச்சியில் குதித்து குத்தாட்டம் போட ஆரம்பித்து அவர்கள் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்டார்கள். பின்னர் பான் இந்தியா படம் என்று திரையுலகம் மாற, சமூக வலைதளங்களில் கவர்ச்சியோ கவர்ச்சி என ஆபாச வெப்சைட்டுகளோ என எண்ணும் அளவுக்கு படத்தை போட்டு குவிப்பதில் போட்டி அதிகமாகி உள்ளது.

 பொன்னியின் செல்வன் படம் அல்ல சவால்= பேரரசு

பொன்னியின் செல்வன் படம் அல்ல சவால்= பேரரசு

இந்நிலையில் இதுகுறித்து திரையுலகில் உள்ளவரே மனம் திறந்து வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். ஊர்களின் பெயரில் படத்தை எடுத்து பெயர் பெற்ற இயக்குநர் பேரரசுதான் அவர். நேற்று நடந்த ஆரகன் பட விழாவில் அவர் வேதனையுடன் இந்த கவர்ச்சி கலாச்சாரம் பற்றி பேசியுள்ளார். இயக்குநர் பேரரசு பேசும்போது, "இன்று வெளியாகியிருக்கும் பொன்னியின் செல்வன் ஒரு படம் அல்ல.. அது ஒரு சவால்.. எம்ஜிஆர், கமல் ஆகியோர் காலத்தில் முயற்சித்து முடியாமல் போனதை, இப்போது மணிரத்னம் சாதித்திருக்கிறார்.

என்னுள் இருந்த கவிஞரை வெளிக்கொணர்ந்தவர் சினேகன்..ஆதரித்தவர் விஜய்

என்னுள் இருந்த கவிஞரை வெளிக்கொணர்ந்தவர் சினேகன்..ஆதரித்தவர் விஜய்

திருப்பாச்சி படத்தை இயக்க ஆரம்பித்த சமயத்தில் இயக்குனர் சினேகன் எனது படத்தில் பாடல் எழுத வேண்டும் என விரும்பினேன். அப்போது அவரிடம் சொல்வதற்காக நானே டம்மியாக சில வார்த்தைகளைப் போட்டு இப்படித்தான் பாடல் வேண்டுமென எழுதி வைத்திருந்ததை அவரிடம் காட்டினேன். அதை பார்த்துவிட்டு இந்தப்பாட்டே நல்லா தான் இருக்கு என்று கூறி பாட்டு எழுதும் வாய்ப்பை எனக்கே கொடுத்தார். எனக்குள் இருந்த கவிஞனை வளர்த்துவிட்ட சினேக கவிஞன் அவர். விஜய்யும் அதற்கு உற்சாகம் கொடுத்தார். வெளிநாட்டிலிருந்து இங்கே படம் தயாரிக்க வருபவர்கள் தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்துகிறார்கள். இங்கிருப்பவர்களோ வெளியூருக்கு ஓடுகிறார்கள்.

குடும்ப பாங்குடன் நடிக்க வரும் ஹீரோயின்கள் கவர்ச்சிப்பக்கம் போகாதீர்கள்

குடும்ப பாங்குடன் நடிக்க வரும் ஹீரோயின்கள் கவர்ச்சிப்பக்கம் போகாதீர்கள்

கதாநாயகி கவிப்ரியா பார்ப்பதற்கு குடும்பப்பாங்கான அழகுடன் அழகாக காட்சியளிக்கிறார். இப்போதெல்லாம் குடும்ப பாங்காக நடிக்கும் பல நடிகைகள் சோசியல் மீடியாவில் கவர்ச்சியாக தங்களது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.. இதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கும். குடும்பப் பெண் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கதாநாயகிகள் கவர்ச்சி பக்கம் செல்லவே கூடாது. அப்படி தடம்மாறி செல்பவர்களை பார்க்கும்போது ரசிகர்களுக்கு வெறுப்புதான் ஏற்படும். உங்கள் பலமே அந்த குடும்பப் பாங்கு தான். அப்படி மாறினால் அவர்களது மார்க்கெட்டே காலியாகி விடும்". என்று வேண்டுகோள் வைத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X