Abirami On Kamal haasan - வேறு வழியே இல்லை அதான் அப்டி ஆகிட்டேன்.. கமல்தான் காரணம் - அபிராமி ஓபன் டாக்

சென்னை: Abirami on Kamal Haasan (கமல் ஹாசன் குறித்து அபிராமி) விருமாண்டி படத்தில் நடித்த அபிராமி கமல் குறித்து பேசியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

உலக நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்படுபார் கமல் ஹாசன். சிறிய வயதிலிருந்தே நடித்து வரும் கமல் ஹாசன் இதுவரை 233 படங்களில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் அவரது நடிப்பும், உழைப்பும் வேறு வேறு கட்டத்துக்கு செல்லும். அதுமட்டுமின்றி அவர் கதை எழுதிய படங்கள், இயக்கிய படங்களும் காலங்கடந்து கொண்டாடப்படுபவை.

Actrss Abiramin Talks about Actor Kamal haasan

ரசிகர்களாக படைப்பாளிகள்: கமல் ஹாசனுக்கு சாமானியர்கள் மட்டும் ரசிகர்களாக இல்லாமல் தற்போதை இளம் படைப்பாளிகளும் ரசிகர்களாக இருக்கின்றனர். அவர்கள் கமல் ஹாசனை ஒரு யுனிவர்சிட்டி போல் பார்த்து அதில்தான் நாங்கள் அனைத்தையும் பயின்றோம் என மேடைக்கு மேடை கூறிவருகின்றனர். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் லோகேஷ் கன்கராஜ். ஒவ்வொரு மேடையிலும் தான் எவ்வளவு பெரிய கமல் ரசிகன் என்பதை உணர்த்திக்கொண்டே இருப்பார். வெறும் ரசிகராக மட்டுமின்றி ஒரு இயக்குநராக மாறி கமலை வைத்து இயக்கிய விக்ரம் படம் மெகா ஹிட்டானது.

லோகேஷ் கனகராஜ் Vs மணிகண்டன்: திரைத்துறையில் கௌதம் மேனனுக்கு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ்தான் கமலின் தீவிரமான ரசிகர் என எண்ணம் எழுந்திருந்த சூழலில் நடிகர் மணிகண்டன் அதை உடைத்துப்போட்டார். சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அவர் கமல் குறித்தும், லோகேஷ் குறித்தும் பேசியதும், அதற்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த ரிப்ளையும் சமூக வலைதளங்களில் முழுக்க முழுக்க ட்ரெண்டங்கில் இருந்தது.

லிஸ்ட்டில் சேர்ந்த நடிகை: இந்நிலையில் அந்த லிஸ்ட்டில் தற்போது அபிராமியு சேர்ந்திருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில் கமல் ஹாசன் குறித்து அவர் பேசும்போது, "எனது வீட்டில் எல்லோருமே கமல் ஹாசனின் தீவிரமான ரசிகர்கள். என் அம்மா, பெரியம்மா, அக்கா, அப்பா என அனைவருமே கமல் ஹாசனின் படங்களை பார்த்துக்கொண்டே இருப்பார்கள். சிகப்பு ரோஜாக்கள் படத்தின் பாடல்களை எல்லாம் பாடிக்கொண்டிருப்பார்கள்.

Actrss Abiramin Talks about Actor Kamal haasan

வேறு வழியே இல்லை: அதனால் எனக்கு வேறு வழியே இல்லை. நானும் கமல் ஹாசனின் ரசிகையாக மாறிவிட்டேன். எனது இயற்பெயர் திவ்யா. ஆனால் எனக்கு கமல் படத்தில் இடம்பெற்ற அதுவும் குறிப்பாக குணா படத்தில் வரும் அபிராமி கதாபாத்திரத்தின் பெயரை வைக்கவில்லை என என் அக்கா அம்மாவிடம் கேட்டுக்கொண்டே இருப்பார். அதனையடுத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தபோது பெயரை மாற்றிக்கொள்ள விருப்பமா என கேட்டார்கள். நான் உடனே அபிராமி என மாற்றிக்கொண்டேன். இந்தப் பெயருக்கு கமல் ஹாசந்தான் காரணம்" என்றார்.

விருமாண்டி அபிராமி: அபிராமி கமல் ஹாசனுடன் விருமாண்டி திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் நடித்தபோது அவருகு வயது 20 என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தனது மிகச்சிறந்த நடிப்பை அன்னலட்சுமி கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்திய அபிராமியை பலரும் புகழ்ந்து தள்ளினர் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் ஒரு கோடை மர்டர் மிஸ்டரி என்ற வெப் சீரிஸ் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X