‘சந்திரமுகி 2’ படத்தில் ஜோதிகாவுக்கு பதில் அந்த நடிகையாமே? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகாவுக்கு பதில் வேறு ஒரு நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
கடந்த 2005ஆம் ஆண்டு திரைக்கு வந்து சக்கைப் போடு போட்டப் படம் சந்திரமுகி. பிரபல இயக்குநரான பி வாசு இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
இதில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேல், மாளவிகா, வினித் என ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே நடித்திருந்தது.

சந்திரமுகி 2
இப்படத்தில் சந்திரமுகியாக நடித்த ஜோதிகா தனது மிரட்டல் நடிப்பால் பெரும் பாராட்டை பெற்றார். குறிப்பாக அவரது நடிப்பில் ராரா பாடல் வேற லெவலில் ஹிட்டடித்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக இயக்குநர் பி வாசு அண்மையில் அறிவித்தார்.

வேட்டையன்
சந்திரமுகி படத்தில் ரஜினி லீடிங் ரோலில் நடித்த நிலையில் இரண்டாம் பாகத்தில் அவரது ரோலில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. படம் குறித்து பேசிய இயக்குநர் வாசு, இரண்டாம் பாகத்தில் வேட்டையன் மன்னனுக்கும், சந்திரமுகிக்கும் நடக்கும் மோதலை படமாக்குவதாக தெரிவித்தார்.

நடிகை சிம்ரன்?
இந்நிலையில் இந்தப் படத்தில் சந்திரமுகி கதாப்பாத்திரத்தில் ஜோதிகாவே நடிப்பார் என்று கூறப்பட்டது. இதுதொடர்பாக படக்குழு பேச்சு வாரத்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ஜோதிகாவுக்கு பதில் நடிகை சிம்ரன் நடிக்கவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

விரைவில் அறிவிப்பு?
இதுதொடர்பாக படக்குழு சிம்ரனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சந்திரமுகி 2 படத்தில் நடிக்க இதுவரை யாரும் தன்னை அணுகவில்லை என்று ஜோதிகா கூறியிருந்தார். இந்நிலையில் அவருக்கு பதில் சிம்ரன் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது,


Click it and Unblock the Notifications











