'லாக்டவுன் முடிஞ்சதும் என்ன செய்வீங்க? சுவாரஸ்ய பதிலுக்கு கிரெடிட் உண்டாம்..ஐடியா கேட்கும் நடிகை!
சென்னை: லாக்டவுன் முடிந்ததும் என்ன செய்வீர்கள்? என்ற கேள்விக்கு சுவாரஸ்யமான பதில் சொன்னால், அவர்களுக்கு கிரெடிட் கொடுக்கிறேன் என்று கூறி இருக்கிறார் பிரபல நடிகை!
Recommended Video
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. அதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்தியாவிலும் இந்த தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

வீடியோ, போட்டோ
இதனால் பொதுமக்கள் வீடுகளுக்கும் முடங்கி கிடக்கின்றனர். படப்பிடிப்புகள் இல்லை என்பதால் நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் இருக்கின்றனர். அவர்கள் தினமும் ஏதாவது வீடியோ, போட்டோ என்று தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை அடா சர்மா, சமூக வலைத்தளங்களில் அடிக்கடி போட்டோஸ் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அடா சர்மா
தினமும் ஏதாவது ஜாலியாக பதிவிடும் இவர், இந்தியில், பிர், கமாண்டோ 2, கமாண்டோ 3 படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிம்புவின் 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். சக்தி சிதம்பரம் இயக்கிய, சார்லி சாப்ளின் 2 படத்திலும் நடித்திருந்தார். தெலுங்கு கன்னடப் படங்களில் நடித்துள்ளார். இப்போது மேன் டு மேன் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

புகைப்படங்கள்
இவர் இப்போது தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படங்களை ஏராளமானோர் லைக் செய்துள்ளனர். அவர் அணிந்துள்ள டிரெஸ் கிளாமராக இருக்கிறது. இதில் 10 போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அனைத்துமே அமர்க்களமாக இருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் ஜாலியாகவும் கிண்டலாகவும் கமென்ட் அடித்துள்ளனர்.

சுவாரஸ்ய பதில்
இதற்கு கேப்ஷனாக, 'என்னிடம் இப்போது இன்டர்வியூ பண்ணுபவர்கள் கேட்கும் கேள்வி, 'லாக்டவுன் முடிந்ததும் என்ன செய்யப் போகிறீர்கள்?" என்பதாகத்தான் இருக்கிறது. என்னிடம் இதற்கு சுவாரஸ்யமான பதில்கள் ஏதுமில்லை. அதனால் உங்களுக்கு ஏதாவது ஐடியா தோன்றினால் சொல்லுங்கள். எனது அடுத்த நேர்காணலில் அதைச் சொல்வேன். உங்களுக்கு கிரெடிட் கூட கொடுப்பேன், சத்தியமாக' என்று தெரிவித்துள்ளார்.

ஜாலியா சுத்தணும்
இதற்கு பலர், லாக்டவுன் முடிஞ்சதும் முதல்ல உங்களைத்தாங்க பார்க்க வரணும், அட்ரஸ் சொல்லுங்க? என்று கேட்டுள்ளனர்.. சிலர், முதல்ல வீட்டை விட்டு வெளியில வந்து ஜாலியா சுத்தணும் என்றும் சிலர் ஒரு லாங் டிரைவ் போகணும் என்றும் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் நண்பர்களை அழைச்சுட்டு போய், சரக்கு அடிக்கணும் என்று தெரிவித்துள்ளனர்.

பேட்டி கொடுக்கறீங்களா?
சில நெட்டிசன்கள், வீட்டுல சாப்பிட்டு போராடிச்சுடுச்சு, அதனால நல்ல ரெஸ்டாரென்டா போயி ஒரு கட்டுக்கட்டணும்' என்றும் நீங்கள் போட்டிருக்கிற இந்த போட்டோ எல்லாமே அருமை. இதுல நீங்க ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க என்றும் தெரிவித்துள்ளனர். சிலர் கிண்டலாக, 'நீங்க இப்பவும் பேட்டிலாம் கொடுக்கறீங்களா? சொல்லவே இல்லை' என்று கலாய்த்துள்ளனர். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











