Don't Miss!
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- News இத்தனை நாளா எங்க போனீங்க? ஓட்டுக்கேட்க போன ஜோதிமணிக்கு கரூரில் எதிர்ப்பு! சமாளித்த திமுக
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
எப்படிலாம் யோசிக்கிறாய்ங்க.. பூமாலையால் மேலாடை.. சிம்பு பட நடிகையின் வேறலெவல் போஸ்.. வழியும் ஃபேன்ஸ்
சென்னை: பூமாலையால் மேலாடை அணிந்து பிரபல நடிகை வெளியிட்டுள்ள வேற லெவல் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
அடா சர்மாவை அடடா சர்மா என்றுதான் அழைக்கிறார்கள், சினிமா வட்டாரத்தில். அத்தனை கூல் அவர்.
எதையும் ஜாலியாக, கேஷுவலாக கையாளும் நடிகைகளில் அவரும் ஒருவர். அதற்கு அவர் இன்ஸ்டா சாட்சி.
அடா செம ஷார்ப்
ரசிகர்களில் கிண்டல் கேள்விகளுக்குக் கூட, அவரே வெட்கப்படும் அளவுக்கு பதில் சொல்வதில், அடா செம ஷார்ப்! சில நேரங்களில் அவரே காமெடியாளராக மாறி நக்கல் நையாண்டியில் ஈடுபடுவதும் உண்டு. அது அவர் சுபாவம். இந்த கொரோனா லாக்டவுனில் இன்ஸ்டாவில் அவர் காட்டிய விளையாட்டுகள், கலகலப்பானவை.
ரசிகர்களை திணறடிப்பார்
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் இவர். அடிக்கடி டான்ஸ், யோகா, ஒர்க் அவுட் மற்றும் வீட்டு வேலை செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பதிவிடுவதை வேலையாக செய்து வருகிறார். சில நேரங்களில் எக்கச்சக்க கவர்ச்சியில் போட்டோ எடுத்து ரசிகர்களை திணறடிப்பார்.
இது நம்ம ஆளு
இவர் தமிழில், சிம்பு நடித்த, இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். சார்லி சாப்ளின் 2 படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்தியில் 1920, பிர், கமாண்டோ 2, கமாண்டோ 3 உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது, மேன் டு மேன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் ஆண் தோற்றத்தில் நடிக்கிறார் அவர்.
கலாய் கேப்ஷன்
பாலிவுட், கோலிவுட் நடிகைகள் விடுமுறைக்காக மாலத்தீவுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். டாப்ஸி, காஜல், பிரணிதா, வேதிகா, ரகுல் பிரீத் சிங், சமந்தா, ஷோபி சவுத்ரி என அங்கு ஏகப்பட்ட டிராபிக். இதையடுத்து சமீபத்தில் ஏரி ஒன்றின் அருகில் நின்று வீடியோ வெளியிட்ட நடிகை அடா சர்மா, கலாய் கேப்ஷன் கொடுத்திருந்தார்.
மாலத்தீவு அல்ல
இது மாலத்தீவு அல்ல, தமிழ்நாட்டில் உள்ள மாகாராஜபுரம் என்றும் இங்கு வேறும் யாரும் இதுவரை படம்பிடிக்கவில்லை, நான்தான் பர்ஸ்ட் என்றும் கிண்டலாகக் கூறியிருந்தார். இந்நிலையில், இப்போது பூமாலையால் மேலாடை அணிந்து, செம கிளாமராக சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
Recommended Video
கேலி ஹேஷ்டேக்
அதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். இதற்கு #100yearsof AdahSharma என கேலியான ஹேஷ்டேக் கொடுத்திருக்கிறார். பலர் இந்தப் புகைப்படங்களையும் அவருடையேன கேலியையும் பாராட்டியுள்ளனர். அருமை, செம, மிரட்டல், அழகு என்று வழக்கம் போல புகழ்ந்து தள்ளியுள்ளனர்.