அவசரத்துல அதை மறந்துட்டீங்களோ? டிரான்ஸ்பரன்ட் உடையில் பிரபல ஹீரோயின்.. கலாய்க்கும் ஃபேன்ஸ்!

By

சென்னை: பிரபல நடிகை டிரான்ஸ்பரன்ட் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வேகமாகப் பரவி வருகின்றன.

Recommended Video

V-CONNECT | ACTRESS KOMAL SHARMA CHAT | என்னோட VOICE அப்பிடித்தான் | FILMIBEAT TAMIL

கொரோனா வைரஸ் உலகை கடுமையாக மிரட்டி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

பல்வேறு நாடுகளில் ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,67,574 ஆக உள்ளது.

அதிகரிக்கும் எண்ணிக்கை

அதிகரிக்கும் எண்ணிக்கை

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளது. இங்கு பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பிறப்பிக்கப்பட்டுள்ள லாக்டவுனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கின்றனர். படப்பிடிப்புகள் இல்லை என்பதால் நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் இருக்கின்றனர்.

அதிரடி கருத்துகள்

அதிரடி கருத்துகள்

இதனால் சமூக வலைதளங்களை, தங்களுக்கான டைம்பாஸாக மாற்றியுள்ளனர். அதில், அதிரடி கருத்துகள், ஆடல், பாடல் வீடியோக்கள், எக்சர்சைஸ் புகைபடங்கள் என வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அவர்களின் பொழுதுபோக்காக அது மாறி இருக்கிறது. அடிக்கடி இப்படி போட்டோஸ், வீடியோ பதிவு பண்ணும் நடிகைகளில், நடிகை அடா சர்மாவும் ஒருவர்.

சார்லி சாப்ளின் 2

சார்லி சாப்ளின் 2

கிளாமர் போட்டோஸ் மற்றும் ஜாலியான வீடியோக்களைப் பதிவிட்டு பரபரப்பை கிளப்புவார். முதலில் கமென்ட் போடும் ரசிகர்களுக்கு அசராமல் பதிலளிப்பார். இவர், இந்தியில், பிர், கமாண்டோ 2, கமாண்டோ 3 படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிம்புவின் 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். சக்தி சிதம்பரம் இயக்கிய, சார்லி சாப்ளின் 2 படத்திலும் நடித்திருந்தார். தெலுங்கு கன்னடப் படங்களில் நடித்துள்ளார்.

ஆணாக நடிக்கிறேன்

ஆணாக நடிக்கிறேன்

இப்போது, மேன் டு மேன் என்ற இந்தி படத்தில் நடிக்க இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, இதுவரை யாரும் நடிக்காத கேரக்டர்களில் நடிப்பதையே விரும்புகிறேன். இல்லை என்றால், இது வழக்கமான ஒன்றுதானே என்று ரசிகர்களுக்கும் போரடித்துவிடும். அடுத்து நடிக்கும் மேன் டு மேன் படத்தில் ஆணாக நடிக்கிறேன் என்று கூறி ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

மறந்துட்டீங்களோ?

மறந்துட்டீங்களோ?

இந்நிலையில், இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கிளாமராக இருக்கின்றன. டிரான்ஸ்பரன்ட் உடையில் மேனி தெரிய அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது. லட்சக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கமென்ட் அடித்துள்ளனர். ஒருவர் அவசரத்துல பேன்ட் போட மறந்துட்டீங்களோ? என்று கேட்டுள்ளார். மற்றொருவர், கமாண்டோ படத்துல உங்க பைட் சீன் பார்த்து மிரண்டுட்டேன் என்று கூறியுள்ளார்.

பாலிவுட்டா? டோலிவுட்டா?

பாலிவுட்டா? டோலிவுட்டா?

கதைகள்ல வர்ற வெள்ளை உடை தேவதை மாதிரி இருக்கீங்க என்று ஒருவரும் எந்த அழகையும் உங்களோட கம்பேர் பண்ண முடியாது என்று ஒரு நெட்டிசனும் கூறியுள்ளனர். ஒரு ரசிகர், 'படிப்புல கவனம் செலுத்தவே முடியலை. என்ன பண்ணலாம்னு ஐடியா சொல்லுங்களேன்' என்று கேட்டிருக்கிறார். உங்களுக்கு பிடிச்சது பாலிவுட்டா? டோலிவுட்டா? என்று கம்பேர் பண்ண சொல்லி இருக்கிறார் ஒருவர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X