'நாங்க சாதாரண நண்பர்கள் இல்லை, அதுக்கும் மேல' இப்படி சொன்ன ஹீரோவுக்கு அதிரடி பதிலளித்த ஹீரோயின்!

By

சென்னை: 'நாங்க சாதாரண நண்பர்கள் இல்லை என்று அந்த ஹீரோ சொன்னதற்கு அதிரடியாகப் பதிலளித்துள்ளார், பிரபல ஹீரோயின்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

பல்வேறு நாடுகளில் ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது இந்த உயிர்க்கொள்ளி வைரஸ்.

அடிக்கடி பதிவு

அடிக்கடி பதிவு

இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். படப்பிடிப்புகள் இல்லை என்பதால் நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் இருக்கின்றனர். அவர்கள் தினமும் ஏதாவது வீடியோ, போட்டோ என்று தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். அடிக்கடி எதையாவது பதிவு பண்ணும் நடிகைகளில், அடா சர்மாவும் ஒருவர்.

மேன் டு மேன்

மேன் டு மேன்

இவர், இந்தியில், பிர், கமாண்டோ 2, கமாண்டோ 3 படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிம்புவின் 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். சக்தி சிதம்பரம் இயக்கிய, சார்லி சாப்ளின் 2 படத்திலும் நடித்திருந்தார். தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். இப்போது, மேன் டு மேன் என்ற இந்திப் படத்தில் நடிக்க இருக்கிறார்.

அக்கறை உள்ளவர்கள்

அக்கறை உள்ளவர்கள்

இந்நிலையில் நடிகர் வித்யூத் ஜாம்வால் சமீபத்தில் அளித்த பேட்டியில், அடா சர்மா பற்றி பேசியிருந்தார். 'அடா சர்மா, எனக்கு தோழி மட்டுமல்ல, நாங்கள் அன்பானவர்கள், கவனம் செலுத்துபவர்கள், வெளிப்படையான மனம் கொண்டவர்கள், அக்கறையுள்ளவர்கள், , மிகச் சிறந்த நண்பர்கள்... உங்களை (அடா சர்மா) போன்ற ஒருவரைதான் விரும்புகிறேன்' என்று கூறியிருந்தார்.

சாதாரண நண்பர்கள்

சாதாரண நண்பர்கள்

இது பாலிவுட்டில் பரபரப்பானது. இருவரும் காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இதற்கு அடா சர்மா பதிலளித்துள்ளார். அவர் கூறும்போது, வித்யூத் சொன்னதை நானும் பார்த்தேன். இதுபற்றி நாங்கள் பேசி இருக்கிறோம். அவரும் நானும் சாதாரண நண்பர்கள்தானா? என்று கேட்கப்பட்டதற்கு, ஏன் தாங்கள் சாதாரண நண்பர்கள் இல்லை எனபதைச் சொல்ல, நிறைய, adjective-களை சேர்த்துவிட்டார் வித்யூத்.

பார்ட்டிக்கு செல்வது

பார்ட்டிக்கு செல்வது

அவர் சொன்னதை ஏற்கிறேன். சாதாரண நண்பர்கள் என்பது இப்போது கேஷுவலான வார்த்தையாகி விட்டது. புதிதாக அறிமுகமாகிறவர்கள் கூட இந்த வார்த்தையை எளிதாகப் பயன்படுத்துகிறார்கள். அதனால் வித்யூத் அப்படிச் சொல்லி இருக்கலாம். நட்பு என்பது வாட்ஸ் அப்பில் செய்திகளையோ, மகிழ்ச்சியான எண்ணங்களை பரிமாறிக் கொள்வதோ, பார்ட்டிக்கு அழைத்துச் செல்வதோ மட்டுமல்ல.

கமாண்டோ 3

கமாண்டோ 3

கவலையில் பங்குகொள்வது, எண்ணங்களை பகிர்வது 'என்று தெரிவித்துள்ளார். அடா சர்மா இப்படி சொல்லி இருப்பதையடுத்து, இவர்கள் இருவரும் காதலில் விழுந்திருப்பது உண்மைதான் என பாலிவுட்டில் கூறுகின்றனர். வித்யூத், தமிழில் பில்லா 2, துப்பாக்கி, அஞ்சான் படங்களில் நடித்துள்ளார். அடா சர்மாவுடன் கமாண்டோ 2, கமாண்டோ 3 படங்களில் நடித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X