'ஆம்பள சட்டை' போட்டோ.. தயவு செஞ்சு இது வேண்டாம்.. நடிகையிடம் கோரிக்கை வைக்கும் பாசக்கார ஃபேன்ஸ்!

By

சென்னை: ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பிரபல நடிகையிடம் இந்த மாதிரி புகைப்படங்களைத் தவிர்க்குமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Recommended Video

V-CONNECT | ACTRESS KOMAL SHARMA CHAT | என்னோட VOICE அப்பிடித்தான் | FILMIBEAT TAMIL

சமூக வலைத்தளங்களின் ஸ்வீட் ஹார்ட் ஆகியிருக்கிறார்கள் சில நடிகைகள். ஊரடங்கு அவர்களை லைக்ஸ்களுக்கும் கமென்டுகளுக்கும் அடிமையாக்கி இருக்கிறது.

ச்சே.. அடிக்ட்லாம் இல்லை என்று சொல்பவர்களிடம், கொஞ்சம் நேரம் போனை ஒளித்து வைத்து விளையாடிப் பாருங்கள். கொதித்து விடுவார்கள்.

காரணமில்லா கருத்து

காரணமில்லா கருத்து

இனி அப்படித்தான். பிரிக்க முடியாதது எதுவோ என்று கேட்டால், சோசியல் மீடியாவும் நடிகைகளும் என்று கிண்டலாகப் பதில் சொல்லும் காலம் இது. சில நடிகைகள் தினமும் எதையாவது பதிவு செய்துகொண்டிருப்பார்கள். சிலர் காரணமே இல்லாமல் எல்லாவற்றுக்கும் கருத்துச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். பலர் லைக்ஸ்களை கவனித்து பெருமைப்பட்டுக் கொள்வார்கள்.

ஏன் கிடைக்கலை?

ஏன் கிடைக்கலை?

இன்னும் சிலர் அவங்களுக்கு அவ்ளோ பாலோயர்களா? நமக்கு ஏன் இப்படி கிடைக்கலை என்று கிளாமர் புகைப்படங்களை பதிவேற்றத் தொடங்கு கிறார்கள். அப்படி இன்ஸ்டாவில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார், நடிகை அதா சர்மா. இவர் கொஞ்சம் ஜாலி கேலி பார்ட்டி. ரசிகர்கள் எடக்கு மடக்காக எதாவது கமென்ட் போட்டால், அதற்கும் பதில் சொல்லி, குஷியாக்குபவர்.

கொஞ்சமல்ல

கொஞ்சமல்ல

இப்போது 'ஆம்பள சட்டை' அணிந்து எடுத்துள்ள அட்டகாசமான போட்டோக்களை பதிவு செய்திருக்கிறார் அவர். கிளாமர் கொஞ்சமல்ல, ஓவராகவே இருக்கும் இந்தப் புகைப்படங்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கமென்ட் போட்டுள்ளனர். ஒருவர், இதே போல எங்கிட்டயும் ஒரு செக்டு சட்டை இருந்தது, ஞாபகப்படுத்திட்டீங்க என்று தெரிவித்துள்ளார்.

புரிஞ்சுக்கோங்க

புரிஞ்சுக்கோங்க

நீங்க நல்ல நடிகைதான். ஆனா, இப்படி சட்டை பட்டன் போடாம வர்றதுல விருப்பம் இல்லை. முதல்ல அதை போடுங்க என்று ஒரு நெட்டிசன் கூறியுள்ளார். இன்னொரு பாசக்கார ரசிகர், தயவு செய்து இந்த மாதிரி போட்டோ போடாதீங்க. ஏன் சொல்றேன்னு புரிஞ்சுக்கோங்க. இது என் கோரிக்கை என்று கூறியிருக்கிறார். ஒரு நெட்டிசன், காரணத்தோடதான் அதை பண்ணியிருக்காங்க என்று அவருக்குப் பதிலளிப்பது போல தெரிவித்துள்ளார்.

கமாண்டோ 3

கமாண்டோ 3

இன்னும் சிலரும் இந்த ஹாட் போட்டோக்கள் தேவையா என்று விளாசியுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை அதா சர்மா தமிழில், பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். சார்லி சாப்ளின் 2 படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்தியில் 1920, பிர், கமாண்டோ 2, கமாண்டோ 3 உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X