என்னங்க பெரிய லேடி சூப்பர் ஸ்டார்.. 200 கோடி வசூல் செய்த முதல் உமன் சென்ட்ரிக் படம்.. அதா ஹேப்பி!
மும்பை: கடும் சர்ச்சை மற்றும் தடைகளுக்கு மத்தியில் வெளியான அதா சர்மாவின் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் 200 கோடி வசூலை அள்ளி மிகப்பெரிய சாதனை படைத்துள்ளதாக அந்த படத்தில் லீடு ரோலில் நடித்த அதா சர்மா பெருமையுடன் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவிலேயே தீபிகா படுகோன் முதல் நயன்தாரா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் உமன் சென்ட்ரிக் படங்களில் நடித்தும் சாதிக்க முடியாத ஒன்றை தான் சாதித்து விட்டதாக அதா கான் பதிவிட்டுள்ளார்.
முதன் முறையாக 200 கோடி வசூல் ஈட்டிய உமன் சென்ட்ரிக் திரைப்படம் தி கேரளா ஸ்டோரி தான் என பதிவிட்டுள்ளார்.

சர்ச்சைகளுக்கு நடுவே சாதனை: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் கேரளாவில் உள்ள இஸ்லாமியர்கள் இந்து பெண்களை மதம் மாற்றம் செய்து வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று தீவிரவாதிகளாக மாற்றி விடுவதாக இயக்குநர் சுதிப்தோ சென் படமாக்கி இருந்தார்.
நடிகை அதா சர்மா, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி மேற்கு வங்கத்தில் இந்த படத்தை தடை செய்தனர்.
பாஜகவினர் ஆதரவு: பிரதமர் மோடி உள்ளிட்ட ஒட்டுமொத்த பாஜகவினரும் இந்த படத்துக்கு பெரும் ஆதரவை கொடுத்தனர். கர்நாடக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட மோடி இந்த படத்தை பாராட்டி பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

வட இந்தியாவில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு கிடைத்த ஆதரவை போலவே தி கேரளா ஸ்டோரி படத்துக்கும் ரசிகர்கள் ஆதரவு கொடுத்த நிலையில், இந்த படம் 200 கோடி வசூலை தற்போது தாண்டி உள்ளது.
சாதனை படைத்த முதல் உமன் சென்ட்ரிக் படம்: இதுவரை எந்த இந்திய உமன் சென்ட்ரிக் படமும் இந்தியாவில் 200 கோடி வசூல் சாதனையை படைக்காத நிலையில், தி கேரளா ஸ்டோரி படம் சாதித்துள்ளதாக அந்த படத்தின் நாயகி அதா சர்மா பெருமையுடன் போஸ்ட் போட்டுள்ளார்.
பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோன், ஆலியா பட், கோலிவுட் நடிகைகளான நயன்தாரா, சமந்தா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மல்லுவுட் லேடி சூப்பர்ஸ்டாரான மஞ்சு வாரியர் என யாருமே இந்த சாதனையை இதுவரை செய்யவில்லை என்பதை இதன் மூலம் அதா சர்மா உணர்த்தி உள்ளார்.

100 கோடி கேட்பாரா: 200 கோடி வசூல் படங்களை கொடுக்கும் நடிகர்கள் 100 கோடி சம்பளம் கேட்டு வரும் நிலையில், 200 கோடி பாக்ஸ் ஆபிஸ் கொடுத்துள்ள அதா சர்மா 100 கோடி சம்பளம் கேட்பாரோ என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும், இந்த படம் நீங்க ஹீரோயினா நடிச்சதற்காக இந்த வசூல் செய்யல, இது உமன் சென்ட்ரிக் படமில்லை மத அரசியல் படம் என நெட்டிசன்களை நடிகை அதா சர்மாவின் போஸ்ட்டுக்கு கீழ் பங்கமாக கழுவி ஊற்றி வருகின்றனர்.
உங்களுடைய அடுத்த படத்தையும் 200 கோடி வசூல் செய்து விட்டு பெருமையா சொல்லுங்க என்றும் விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











