அடங்க மறு.. அத்துமீறு… திமிறி எழு... திருப்பி அடி... மிரட்டும் டீசர்...!

அடங்கமறு திரைப்பட டீசர் வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் அடங்க மறு திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

காவல்துறை அதிகாரியாக ஜெயம் ரவி நடித்து வெற்றியடைந்த தனி ஒருவன், போகன் திரைப்படங்களுக்கு பிறகு மீண்டும் ஜெயம் ரவி காவல்துறை அதிகாரி அவதாரம் எடுத்திருக்கும் படம் அடங்க மறு.

Adanga Maru movie teaser!

இப்படத்தில் ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியுள்ளார். துடிப்பான போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் சுதந்திர தினத்தன்று வெளியாகும் என அறிவித்தபடி இன்று வெளியிட்டுள்ளனர். டீசரைப் பார்க்கும்போது ஜெயம்ரவியின் அடுத்த ஆக்‌ஷன் படம் எனத் தெரிகிறது.

அநியாயத்தைக் கண்டு பொங்கும் நேர்மையான போலீஸ் அதிகாரியை சட்டம் என்ற வரம்புக்குள் அடிமைப்படுத்தி குற்றவாளிகளை தப்பிக்க விடுவதும், அதிகாரிகளின் கட்டளைகளுக்கு அடங்காமல் எப்படி அநியாயங்களை எதிர்த்து கதாநாயகன் போராடுகிறான் என்பதும் தான் கதை எனத் தெரிகிறது.

ஆக்‌ஷன் காட்சிகளை ஜெயம் ரவி மிகச்சிறப்பாக செய்திருப்பதை டீசரில் பார்க்க முடிகிறது. இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X