நான்கு கல்லூரிகளில் ஷூட் செய்தோம்… ”ஆங்கு வாங்கு” பற்றி கார்த்திக் தங்கவேல்
அடங்கமறு படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகியுள்ளது
சென்னை: நடிகர் ஜெயம் ரவிக்கு ஒரு கல்லூரி பாடல் தயாராகிறது.
நடிகர் ஜெயம் ரவி தற்போது நடித்திருக்கும் திரைப்படம் அடங்க மறு. அடங்க மறு.. அத்து மீறு என சமீபத்தில் டீசர் வெளியாகி மிரட்டியுள்ள நிலையில், தற்போது சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது.

ஆங்கு வாங்கு என்று தொடங்கும் இப்பாடலை பின்னணி பாடகர் முகேஷ், எம்.எல்.ஆர். கார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இணைந்து பாடியுள்ளனர். லோகன் பாடல் எழுதியுள்ளார்.
இப்பாடல் குறித்து பேசியுள்ள இயக்குனர் கார்த்திக் தங்கவேல், இது வழக்கமான ஒரு ஹீரோ அறிமுக பாடல் எனக் கூறினார்.
ஜெயம் ரவிக்கு அறிமுகப்பாடல் வைக்கும்போது அது நன்றாக வருவதனால், இப்படத்தில் ஒரு அறிமுகப்பாடலை வைக்க முடிவு செய்ததாக அவர் தெரிவித்தார். மேலும், கல்லூரி மாணவர்களிடையே ஜெயம் ரவிக்கு நல்ல கிரேஸ் இருப்பதனால் சென்னையில் உள்ள நான்கு கல்லூரிகளில் பாடலை படமாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய ஆர்கெஸ்ட்ரா செட்டப்பில் இப்பாடலை பதிவு செய்துள்ளனர். சாம் சிஎஸ் மற்றும் முகேஷ் இணைந்து பாடிய டசக்கு டசக்கு பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்து சாம் சிஎஸ் க்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.
அந்த வகையில் இந்த பாடலும் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கிறார்கள். அடங்க மறு திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராஷி கன்னா நடித்துள்ளார். முனிஸ்காந்த், பொன்வண்ணன், அழகம் பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ளனர். விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது.


Click it and Unblock the Notifications











