’தளபதி 65’க்காக விஜய்யிடம் கதை சொல்லிய இளம் இயக்குநர்.. இந்த காம்போ அமைந்தாலும் சூப்பரா இருக்குமே!

சென்னை: ஜெயம் ரவியின் அடங்கமறு திரைப்படத்தை இயக்கிய இளம் இயக்குநர் கார்த்திக் தங்கவேல் 'தளபதி 65' படத்துக்காக கதை சொல்லியுள்ளாராம்.

தளபதி விஜய்யின் 64வது படமான மாஸ்டர் திரைப்படம் அடுத்த மாதம் ஷூட்டிங்கை நிறைவு செய்யவுள்ளது.

இந்நிலையில், 'தளபதி 65' படத்தை இயக்கப்போகும் அதிர்ஷ்டசாலி இயக்குநர் யார் என்ற பேச்சுக்கள் தான் கோலிவுட்டில் தினமும் அடிபட்டு வருகிறது.

வேற லெவல் எதிர்பார்ப்பு

வேற லெவல் எதிர்பார்ப்பு

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் 300 கோடிக்கும் வசூலித்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்திற்கு பயங்கரமான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. பிகில் படத்திற்கு போட்டியாக லோகேஷின் கத்தி படம் வெளியாகி பாராட்டுக்களை பெற்றது தான் இதற்கு காரணம்.

ஷூட் ஓவர்

ஷூட் ஓவர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், ரம்யா, செளந்தர்யா, பிரேம், சேத்தன் என நடிகர்கள் பட்டாளமே நடித்து வரும் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி இறுதி வாரத்தில் முடியப் போவது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 65

தளபதி 65

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகி வரும் தளபதி விஜய்யின் 64வது படமான மாஸ்டர் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தளபதி 65 படத்தை இயக்கப் போகும் அந்த அதிர்ஷ்டசாலி இயக்குநர் யார் என்ற பேச்சுத் தான் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ரூமர்

ரூமர்

தளபதி 65 படத்தை ஷங்கர் இயக்கப் போகிறார் என்றும், ஏ.ஆர். முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி 2வை இயக்கப் போகிறார் என்றும், திருப்பாச்சி, சிவகாசி படங்களை இயக்கிய பேரரசு தான் தளபதி 65 படத்தின் இயக்குநர் என்றும் பல வதந்திகள் தளபதி 65 இயக்குநர் குறித்து பரவி வருகிறது.

குடும்ப படம்

குடும்ப படம்

அதுமட்டுமின்றி, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் முழுக்க முழுக்க குடும்பம் சென்டிமென்ட், காமெடி என பக்கவான மாஸ் கமர்ஷியல் படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லேட்டஸ்ட்

லேட்டஸ்ட்

இதில், லேட்டஸ்ட்டாக அடங்கமறு பட இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இணைந்துள்ளார். ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படமான அடங்கமறு படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேல், தளபதி விஜய்யை சந்தித்து ‘தளபதி 65' படத்துக்கான அதிரடி ஆக்‌ஷன் கதையை கூறியுள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளன.

இறுதி முடிவு

இறுதி முடிவு

யார் என்ன சொன்னாலும், தளபதி 65 குறித்த அதிகாரப்பூர்வ முடிவு தளபதி விஜய்யிடம் இருந்து விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கோலிவுட்டின் வசூல் மன்னனான விஜய்யை வைத்து தளபதி 65 படத்தை இயக்கப் போகும் அந்த அதிர்ஷ்டசாலி இயக்குநர் யார் என்பது கூடிய சீக்கிரமே தெரியத்தானே போகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X