நடிகை சுரபி வெளியிட்ட அடங்காதே படத்தின் பாடல் அப்டேட்!
சென்னை : நடிகை சுரபி தமிழில் அறிமுகமாகி இருந்தாலும் இன்றளவும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி படம் எதுவும் அமையவில்லை.
எனவே தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பிஸியாக நடித்து வரும் சுரபி அடங்காதே என்ற திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடித்துள்ளார்.
பல்வேறு காரணங்களால் இந்த படத்தின் வெளியீடு தள்ளிப் போய்க்கொண்டே இருக்க அடங்காதே படத்தின் பாடல் வெளியீடு பற்றிய முக்கிய அப்டேட்டை தற்பொழுது சுரபி வெளியிட்டுள்ளார்.

வாய்ப்புகள் அமையவில்லை
தமிழ் சினிமாவில் முதல் திரைப்படமே ஹிட் கொடுத்த பிறகும் அதை தொடர்ந்து பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை என இதர மொழிகளுக்கு சென்ற நடிகைகள் பலர் இருக்கையில் அதில் நடிகை சுரபியும் ஒருவராக உள்ளார். இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமான சுரபி அதில் தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து முதல் படத்திலேயே ரசிகர் கூட்டத்தையும் கொண்டார்.

தெலுங்கு பக்கம்
கதாநாயகி வேடம் அமையவில்லை என்றாலும் வேலையில்லா பட்டதாரியில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த சுரபிக்கு புகழ் கடைசி படமாக அமைந்தது. அதன்பிறகு தமிழில் சரிவர வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு பக்கம் சென்ற இவருக்கு அங்கு பெரும் வரவேற்பு கிடைக்க அதைத் தொடர்ந்து கன்னடத்திலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

பல்வேறு பிரச்சனைகளை
நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் அடங்காதே என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாக வேண்டிய இந்த திரைப்படம் இப்பொழுது வரை வெளியாகாமல் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இதில் ஜிவி பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்திருக்க சண்முகம் இயக்கியுள்ளார்.

நீ இந்திரனா
தெலுங்கில் சாஷி கன்னடத்தில் சகத் என சுரபிக்கு அடுத்தடுத்த படங்கள் வெளியாக இருக்கின்ற நிலையில் அடங்காதே பற்றிய முக்கிய அப்டேட் ஒன்றையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நீ இந்திரனா என்ற மெலோடி பாடல் பனாரஸில் படம்பிடிக்க பட்டது . இதில் சுரபி மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் இருவரும் நீலநிறத்தில் கண்கவர் காஸ்ட்யூமில் இருக்கும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படம் மிக விரைவிலேயே திரையரங்குகளில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











