பிரபல ஸ்டண்ட் மாஸ்டருக்கு டோஸ் கொடுத்த அஜித்...ஏன் தெரியுமா?

சென்னை : நடிகர் அஜித் எப்போதுமே மற்றவர்கள் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து நடந்துக் கொள்பவர். சக கலைஞர்களுக்கு மரியாதை கொடுத்து நடக்கும் நடிகர்களில் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுபவர். யாரையுமே இவர் குறைத்து மதிப்பிடாதவர் என்ற பெயர் இவருக்கு திரைத்துறையில் உண்டு.

நடிகர் அஜித்

நடிகர் அஜித்

தமிழ் சினிமாவின் முக்கியமான ஹீரோவாக இருப்பவர் நடிகர் அஜித். இவர் தமிழ் திரையுலகிற்கு வந்து 30 ஆண்டுகளை கடந்து தொடர்ந்து முன்னணி ஹீரோவாக இருந்து வருகிறார். எந்தவிதமான பின்புலமும் இல்லாமல் இவர் தனது வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்தையும் செதுக்கியுள்ளார்.

அகந்தை இல்லாத அஜித்

அகந்தை இல்லாத அஜித்

சினிமாவில் தான் தற்போது இருக்கும் நிலைக்கு வருவதற்கு இவர் செய்த தியாகங்கள் ஏராளம். ஆனாலும் பெரிய இடத்தில் தான் இருக்கிறோம் என்ற அகந்தை இவரிடம் இல்லாததே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் இருந்ததை போலவே தான் தற்போதும் சக மனிதர்களை மதிக்கும் வழக்கத்தை முக்கியமாக இவர் மேற்கொண்டு வருகிறார்.

தல பட்டத்தை மறுத்த அஜித்

தல பட்டத்தை மறுத்த அஜித்

இவர் மற்றவர்களுக்கு தெரியாமல் ஏராளமான நலப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். தனக்கு ரசிகர்கள் கொடுத்த தல என்ற பட்டத்தையும் இவர் மறுத்துள்ளார். இவ்வாறு அஜித் குறித்து சொல்ல ஏராளமான விஷயங்கள் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் அடங்காதே படத்தின் இயக்குநர் சண்முகம் முத்துசாமி அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது முக்கியமான ஒரு விஷயத்தை அஜித் குறித்து பகிர்ந்துள்ளார்.

சுவாரஸ்யமான சம்பவம்

சுவாரஸ்யமான சம்பவம்

தமிழ் இன்டஸ்ட்ரியில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சினிமாத்துறையிலும் சின்னப்படம் மற்றும் பெரிய படம் என்ற வித்தியாசம் காணப்படுவதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். காதல் என்ற படத்தில் தான் வசனம் எழுதிக் கொண்டிருந்தபோது நடைபெற்ற ஒரு சம்பவம் குறித்து அவர் நினைவுக் கூர்ந்துள்ளார்.

அஜித்திடம் மன்னிப்பு கேட்ட சில்வா

அஜித்திடம் மன்னிப்பு கேட்ட சில்வா

அந்தப் படத்தின் சூட்டிங்கின்போது சில்வா மாஸ்டருக்கு அஜித் போன் செய்த நிலையில், அவர் சின்னப் படத்தின் சூட்டிங்கில் தான் உள்ளதாக அஜித்திடம் கூறியுள்ளார். தொடர்ந்து அவர்கள் போனில் பேசியபோது, சில்வா தொடர்ந்து மன்னிப்பு கேட்டதாக சண்முகம் தெரிவித்தார்.

படத்தின் வெற்றிக்கு காரணம்

படத்தின் வெற்றிக்கு காரணம்

போனில் பேசிய அஜித், ஒரு படம் சின்னப்படம், பெரிய படம் என்று எப்படி தீர்மானிக்க முடியும் என்றும் ஒரு காலத்தில் அனைவரும் சின்ன ஹீரோவாக இருந்து பெரிய ஹீரோக்களாக மாறியதாக தெரிவித்ததாக சில்வா கூறியுள்ளார். எந்தப்படமும் எடுக்கும்போது சின்னப்படமாக இருப்பதில்லை என்றும் அதன் வெற்றியிலும் மக்களின் கொண்டாட்டத்திலும்தான் பெரிய படமாக மாறும் என்றும் அஜித் கூறியதாக சில்வா தெரிவித்துள்ளார்.

நாடித்துடிப்பை உணர்ந்த அஜித்

நாடித்துடிப்பை உணர்ந்த அஜித்

இந்த அளவிற்கு ரசிகர்களையும் படங்களையும் புரிந்து வைத்துள்ளவர் நடிகர் அஜித். ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து படங்களை தேர்ந்தெடுப்பவர் அவர். சமீபத்தில் பேசிய டைரக்டர் ஹெச் வினோத்கூட, டைரக்டரை முழுமையாக நம்பி படத்தை அஜித் ஒப்படைப்பார் என்று பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X