வெளியான வேகத்தில் அடிச்சிதூக்கிய #AdchiThooku பாடல் வீடியோ: 1 மணிநேரத்தில்...
Recommended Video

சென்னை: அடிச்சிதூக்கு பாடல் லிரிக்கல் வீடியோ புதிய சாதனை படைத்துள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படத்தில் வரும் அடிச்சிதூக்கு பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று இரவு 7 மணிக்கு வெளியானது.
அப்டேட் எப்பொழுது வரும் அதை கொண்டாடுவோம் என்று காத்திருந்த தல ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துவிட்டனர்.
அடிச்சிதூக்கு
அடிச்சிதூக்கு பாடல் வீடியோ வெளியான ஒரு மணிநேரத்தில் அதை 20 லட்சம் பேர் பார்த்துவிட்டனர். இதை பார்த்த சத்யஜோதி பிலிம்ஸ் அந்த சாதனையை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.
விஸ்வாசம்
அடிச்சிதூக்கு பாடல் வீடியோவுக்கு கிடைத்த லைக்ஸுகளை சமூக வலைதளங்களில் பெருமையாக பேசி வருகின்றனர் தல ரசிகர்கள். இமான் இசையில் பாடல் வித்தியாசமாக உள்ளது. விவேகாவின் பாடல் வரிகள் தெளிவாகவும், கேட்க இதமாகவும் இருக்கிறது.
இசை
இமான் அஜித் படத்திற்கு முதன்முதலாக இசையமைத்துள்ளார். அவரின் இசை அஜித் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.
அஜித்
அடிச்சிதூக்கு பாடல் பட்டிதொட்டி எல்லாம் பல காலம் கேட்கும் என்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











