#AdchiThooku: சும்மா தெறிக்கவிட்ட இமான், ட்விட்டரை அதிரவைக்கும் தல ரசிகாஸ்
Recommended Video

சென்னை: விஸ்வாசம் படத்தின் முதல் சிங்கிள் பாடலான அடிச்சிதூக்கு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. ரிலீஸை உறுதி செய்ததை தவிர எந்த அப்டேட்டும் கிடைக்காததால் தல ரசிகர்கள் செம கடுப்பில் இருந்தனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் சிவாவிடம் அப்டேட் கேட்டு கேட்டு அட போங்கய்யா என்று கோபம் அடைந்தனர். தல, இனி தயவு செய்து சிவா, சத்யஜோதி பிலிம்ஸுடன் மட்டும் கூட்டணி வேண்டாம் என்று கேட்கும் அளவுக்கு எரிச்சல் அடைந்தனர்.
இந்நிலையில் அப்டேட் கொடுத்தது சத்யஜோதி பிலிம்ஸ். அதாவது விஸ்வாசம் படத்தில் வரும் அடிச்சிதூக்கு பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடி பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
அடிச்சிதூக்கு பாடலுக்கு இமான் வித்தியாசமாக இசையமைத்துள்ளார். விடிவதற்குள் அடிச்சிதூக்கு பாடல் யூடியூபில் புதிய சாதனை படைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
சும்மா பாடல் வெளியீட்டு அறிவிப்புக்கே ட்விட்டரை தெறிக்க விட்டார்கள் தல ரசிகர்கள். பாடலே வெளியாகிவிட்ட நிலையில் சும்மாவா இருப்பார்கள்.


Click it and Unblock the Notifications











