DNA Blue Sattai Maran Review: DNA படத்துல என்ன பிரச்னைனா.. விமர்சனத்தில் லிஸ்ட் போட்ட ப்ளூ சட்டை மாறன்
சென்னை: இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா விஜயன், சேத்தன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகியுள்ள படம் DNA . இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் படம் குறித்து தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகன் சரக்கு போட்டுக் கொண்டு சுற்றிக் கொண்டு உள்ளார். கதாநாயகி வெள்ளந்தி எப்போது என்ன பேச வேண்டும் என்பது தெரியாது. இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். இவர்களுக்கு குழந்தையும் பிறக்கிறது. பிறக்கும் குழந்தை தன்னுடையது இல்லை என கதாநாயகி கூறுகிறர். இதை பலரும் நம்ப மறுக்கிறார்கள். ஆனால் அதர்வா நம்புகிறார். DNA டெஸ்ட் எடுத்து பார்க்கிறார்கள். அதிலிருந்து பிரச்னை தொடர்கிறது, அதன்பின்னர் என்ன ஆனது என்பதுதான் மீதி கதை.
இந்த படத்தில் என்ன பிரச்னை என்றால் இவர்கள் கையில் இருக்கும் குழந்தை இவர்களது இல்லை என்பது DNA டெஸ்ட்டில் தெரிந்துவிட்டது. கையில் இருக்கும் குழந்தை யாருடையது என்பதற்கு விசாரணை நடத்த வேண்டும் இல்லையா? பரபரப்பான விசாரணை இருந்தால் தானே படம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் அப்படி எதுவும் இல்லை. படத்தில் ஒரு ஆட்டோக்காரர் வருவார், அவர் கூட சிறப்பாக புலானாய்வு விசாரணை செய்வார். அந்த அளவுக்கு கூட புலனாய்வை போலீஸும் செய்யவில்லை, கதாநாயகனும் செய்யவில்லை.

தேவையில்லாத காட்சிகள்: இதெல்லாம் கூட பரவாயில்லை, இதற்கு முன்னர் காட்டிய கதாநாயகன் காதல் தோல்வியில் சரக்கு போட்டுக் கொண்டு சுற்றுவது, கதாநாயகிக்கு மனநிலை சரியில்லை என்று கூறினார்களே அது என்ன ஆனது? அதற்கும் இந்த படத்திற்கும் என்ன சம்பந்தம்? அது எல்லாம் டைம் வேஸ்ட் தானே? அது எல்லாம் ஃபுட்டேஜ்க்காக எடுத்து வைத்துள்ளார்கள். படம் பார்ப்பவர்களுக்கு அது நேர விரயம் தானா? கதாநயகனுக்கும் கதாநாயகிக்கும் திருமணம் ஆனது. அதன் பின்னர் குழந்தை பிறந்தது என படத்தை ஆரம்பித்திருக்க வேண்டும் தானே? அதுதானே கதை.
வில்லன் - கதாநாயகன்: கதாநாயகன் காவல்துறையில் புகார் அளிக்கிறார். அதன் பின்ன மொத்த காவல்துறையையும் அவரே கட்டுக்குள் எடுக்கிறார். அதன் பின்னர் கதாநாயகன் எடுப்பதுதான் முடிவு. யார் கிடைத்தாலும் இழுத்து போட்டு அடிக்கிறார். இதனாலே காணமல் போன குழந்தை இவர்களுக்கு எப்படியாவது கிடைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வரமாட்டிங்கிறது. கிடைப்பவனை எல்லாம் போட்டு அடித்து கதாநாயகன் வில்லன் படமாக மாற்றி வைத்துள்ளார். பழைய படங்களில் கிளைமேக்ஸில் அனைத்து கதாபாத்திரங்களையும் கோவிலில் திரட்டி சுபம் என போடுவார்கள் அல்லவா. அதுபோல, இந்த படத்தில் தேவை இருக்கிறதோ இல்லையோ, எல்லா கதாபாத்திரங்களையும் ஒரு கோவிலில் திரட்டி படத்தை முடித்துவிட்டார்கள். நல்ல புலனாய்வுப் படமாக வரவேண்டியதை கதாநாயகன் வில்லன் படமாக மாற்றி கோட்டை விட்டுவிட்டார்கள்" என்று தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளார். இவரது விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











