முதுகில் குத்தியவர்களுக்கு நன்றி: விவேகம் பன்ச் டயலாக் பேசும் ஏஏஏ இயக்குனர்
சென்னை: தனது முதுகில் குத்தியவர்களுக்கு விவேகம் பன்ச் டயலாக் மூலம் பதில் அளித்துள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.
சிம்புவை வைத்து ஏஏஏ படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன். படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 80 சதவீதத்திற்கு மேல் முடிந்தும் படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இரண்டாம் பாகம் வருமா, வராதா என்று சிம்பு ரசிகர்கள் ஆதிக்கை கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் அவர் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
தல
இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும் எல்லா சூழலிலும் நீ தோத்துட்ட தோத்துட்டன்னு உன் முன்னாடி நின்னு அலறுனாலும் நீயா ஒத்துக்குற வரைக்கும் எவனாலும் எங்கேயும் எப்பவும் உன்ன ஜெயிக்க முடியாது நெவர் எவர் கிவ் அப். என் முதுகில் குத்தியவர்களுக்கு நன்றி. நான் எழுந்து வருவேன் என ட்வீட்டியுள்ளார் ஆதிக்.
ரியாக்ஷன்
ஆதிக்கு...
ஏஏஏ2
தலைவா ஏஏஏ2 எப்போ?
ஹிட்
ஏஏஏ2 வரும்...தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் பாகம் தோல்வி அடைந்து 2ம் பாகம் ஹிட் ஆன ஒரே படம்னு சரித்திரம் படைக்கும்


Click it and Unblock the Notifications











