Ajith X Mohanlal: அஜித் படத்தில் லால் ஏட்டன்.. AK 64 க்கு ஆதிக் ரவிச்சந்திரன் போடும் மாஸ் ஸ்கெட்ச்!
சென்னை: அஜித் குமார் ரசிகர்களுக்கு அஜித் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் என்றாலே வானத்துக்கும் பூமிக்கும் சந்தோஷத்தில் குத்தித்து விடும் அளவுக்கு கொண்டாட்டத்தில் மூழ்கிப் போவார்கள். காரணம் அஜித்தின் ஃபேன் பாயாக இருந்து கொண்டு அஜித்தை வைத்து அவர் எடுத்த குட் பேட் அக்லி மொத்த ரசிகர்கள் கூட்டத்தையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திவிட்டது. இந்நிலையில் அஜித்தின் 64வது படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கவுள்ளார் என்றும் ஏற்கனவே உலா வந்த நிலையில் தற்போது புது அப்டேட் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.
அஜித் கடந்த சில ஆண்டுகளாகவே தனது கதைத் தேர்வில் மிகவும் கவனமாக இருக்கிறார். அதாவது, கதாநாயக பில்டப் இல்லாமல் படத்தை தேர்வு செய்து வருகிறார். இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் கவலையாக உள்ளார்கள். அதாவது, ரசிகர்கள் அஜித்தை மாஸ் காட்சிகளில் பார்க்க ஆசைப்பட்டார்கள். அப்படி இருக்கும்போதுதான் அஜித்தை எப்படியோ பேசி பேசி கன்வின்ஸ் செய்து அஜித்தை குட் பேட் அக்லி படத்தில் நடிக்க வைத்துவிட்டார். இந்த படத்தில் அஜித்துக்கு காட்சிக்கு காட்சி மாஸ், பஞ்ச் வசனங்கள் என அஜித்தை ரசிகர்கள் எப்படி எல்லாம் திரையில் பார்த்து அழகு பார்க்க ஆசைப்பட்டார்களோ அப்படி எல்லாம் படத்தில் அஜித்தை காட்டி அஜித் ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவைக் கொடுத்திருந்தார் ஆதிக்.
ரசிகர்கள் இந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்த அஜித்துக்கும் மிகவும் ஹேப்பி. இதனால்தான் இவர்கள் இரண்டாவது முறையாக இணைகிறார்கள் என்ற தகவல் வெளியானதும் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு ஆளானார்கள். படத்தின் கதை ஏற்கனவே அஜித்திடம் கூறி ஆதிக் ஓ.கே வாங்கிவிட்டார் என்றும் அஜித்துக்கும் கதை மிகவும் பிடித்துவிட்டது எனவும் கூறினார்கள்.

மோகன்லால்: இந்நிலையில் இந்த படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் மோகன்லாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தற்போது தகவல் கோலிவுட்டில் உலா வருகிறது. அதாவது மோகன் லால் இந்த படத்தில் அஜித்திற்கு வில்லனாக அல்லது நண்பனாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் திரையில் அஜித் மற்றும் மோகன்லாலை ஒரே ஃப்ரேமில் பார்த்தால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
எப்போது படப்பிடிப்பு: நடிகர் அஜித்குமார் தற்போது கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். செப்டம்பர் மாத இறுதியில் அல்லது அக்டோபர் மாத தொடக்கத்தில் இந்த கார் ரேஸ் முடிவுக்கு வருகிறது. இப்படி இருக்கும்போது அக்டோபர் மாதம் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் நடைபெறும் என அஜித்தே தெரிவித்திருந்தார்.
யுவன்: இது மட்டுமல்லாமல் அஜித் சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அஜித்தின் 64வது படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றுவதற்காக இருக்கும் என ரசிகர்கள் பேசி வருகிறார்கள். எது எப்படியோ திட்டமிட்டபடி அக்டோபர் மாதம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கினால் படம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











