தாய்மாமனான விக்ரம் பிரபு.. ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா தம்பதிக்கு ஆண் குழந்தை.. மொத்த ஃபேமிலியும் ஹேப்பி

சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த மூன்று தலைமுறைகளாக நடித்து வருபவர்கள் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் குடும்பத்தினர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இளைய திலகம் பிரபு அவரது மகன் விக்ரம் பிரபு என தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர்கள் நடிகர்களாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா மற்றும் இயக்குநர் ஆதிக்க ரவிச்சந்திரனுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதியருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ள தகவல் திரையுலகினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. திரை பிரபலங்கள் பலரும் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள், மேலும் நடிகர் விக்ரம் பிரபு தாய் மாமா ஆகி விட்டார் இனி மாப்பிள்ளை தூக்கிக்கொண்டு உலகம் முழுவதும் சுற்றுவார் என்று பதிவிட்டு வருகிறார்கள்.

Adhik Ravichandran and Aishwarya Prabhu welcomed a baby boy bringing joy to the entire Sivaji Ganesan family

நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்தில் திரைப்படங்கள் பலரும் கலந்து கொண்டனர். ஆதிக்க ரவிச்சந்திரனைப் பொறுத்தவரை, திரிஷா இல்லனா நயன்தாரா, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களை அவர் இயக்கியிருந்தார். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம், அஜித் நடிப்பில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்ற படமான, குட் பேட் அட்லி படம் தான். இந்த படத்தில் தனது மாமனார் பிரபுவை ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தார்.

அஜித் உடன்: இந்த படத்துக்கு அடுத்து அஜித்தின் 64 ஆவது படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியானது. ஆதிக்க ரவிச்சந்திரன் படத்தின் படபிடிப்புகளை விரைவில் தொடங்கி விடுவோம் என்றெல்லாம் செய்தியாளர்களை சந்திக்கையில் தெரிவித்து வந்தார். இதனால் ரசிகர்களும் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் அஜித், கார் பந்தயங்களில் மிகவும் பிசியாக ஈடுபட்டு வந்ததால், அஜித்துடன் ஆதிக்க ரவிச்சந்திரன் பல கார் பந்தயப் போட்டிகளின் போது காணப்பட்டார்.

Adhik Ravichandran and Aishwarya Prabhu welcomed a baby boy bringing joy to the entire Sivaji Ganesan family

அடுத்த படம்: கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி குட் பேட் அக்லி படம் வெளியானது. அதன் பின்னரும் அஜித்தை வைத்து இவர் படம் இயக்குவதாக இருந்ததால் அந்தப் படத்தின் கதை மற்றும் திரைக்கதை உருவாக்குவதில் தான் கவனம் செலுத்தி வந்தார். இப்படி இருக்கையில் அந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.

ஆண் குழந்தை: ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்ற தகவல் பலருக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. சில தினங்களுக்கு முன்னால் ஐஸ்வர்யாவுக்கு ஏற்பட்ட பிரசவ வலியால் அவரை உடனே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது .திரைப் பிரபலங்கள் பலரும் தம்பதியருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X