42 வயதான ஐஸ்வர்யாவை இரண்டாம் திருமணம் செய்த ஆதிக்..பல கோடி வரதட்சணை.. வாரிக்கொடுத்த பிரபு!

சென்னை: நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நிலையில், மருமகனுக்கு பல கோடிகளை வரதட்சணையாக வாரிக் கொடுத்துள்ளார்.

2015ம் ஆண்டு வெளியான த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன்.

இவர் சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கினார். அந்தப் படம் தோல்விப் படமாக அமைந்தது.

adhik ravichandran and aishwarya wedding dowry details

மார்க் ஆண்டனி: அதன் பின் பிரபு தேவாவை வைத்து அவர் இயக்கிய பகீரா படத்தை இயக்கினார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதையடுத்து, அண்மையில் விஷால், எஸ்ஜே சூர்யா நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. டைம் ட்ராவல் கதையை அடிப்படையாக் கொண்டு உருவான இத்திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு கவனத்தை ஈர்த்தது.

திருமணம்: அடுத்ததாக அஜித்தை வைத்து பட இயக்க உள்ள நிலையில், நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் செய்து கொண்டார். சென்னையில் நடைபெற்ற இந்த திருமணத்தில், நடிகர் விஷால், இயக்குநர் மணிரத்னம், சுஹாசினி, துல்கல் சல்மான், லெஜண்ட் சரவணன், சுந்தர்.சி, குஷ்பூ என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.

விவாகரத்து: நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவிற்கு ஏற்கனவே பிரபு சகோதரி தேன்மொழியின் மகன் குணாலுடன் திருமணம் நடைபெற்றது. குணால் லண்டனில் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த நிலையில், மகள் ஐஸ்வர்யாவும் லண்டனில் செட்டில் ஆனார். ஆனால், திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

இயக்குநருடன் காதல்: விவாகரத்துக்கு பின் மீண்டும் சென்னை திரும்பிய பிரபுவின் மகள் ஐஸ்வர்யா கேக் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்திருக்கிறார். இவர் மெல்ட்ஸ் டெசர்ட் (meltz.dessertz) என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நேரத்தில் ஐஸ்வர்யாவும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நட்பு ஏற்பட அது காதலாக மாறியதை அடுத்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணமும் கோலாகலமாக நடந்து முடிந்தது.

பல கோடி வரதட்சணை: தற்போது சிவாஜி குடும்பத்தில் ஒருவராக இணைந்து இருக்கும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நகை மற்றும் சொகுசு பங்களா என கோடி கோடியாக வரதட்சணை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான ஐஸ்வர்யாவுக்கு 42 வயசு என்றும், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு 32 தற்போது 32 வயதாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X