தல வர்றார், காது பத்திரம்: சிம்பு பட இயக்குனர் எச்சரிக்கை
Recommended Video

சென்னை:தல வர்றார், காது பத்திரம் என்று இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் முன்னறிவிப்பு எதுவுமின்றி வெளியான விஸ்வாசம் மோஷன் போஸ்டர் புதிய சாதனை படைத்துள்ளது.

மோஷன் போஸ்டரின் இறுதியில் அஜித் குமார் வந்தது அவரின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் விஸ்வாசம் குறித்து அஅஅ படம் எடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
#ViswasamArrivesForPongal டபுள் ட்ரீல் தல பொங்கல் டா #ViswasamThiruvizha தல அஜித் சார் என்ட்ரி, தயவு செய்து உங்களின் காதுகள் பத்திரம் டா கண்ணா... தல தரிசனத்திற்காக வெயிட்டிங் என்று தெரிவித்துள்ளார்.
இந்த பொங்கல் பண்டிகை சுவாரஸ்யமான பொங்கலாக இருக்கும். பேட்ட, விஸ்வாசம், வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய மூன்று படங்கள் அன்று ரிலீஸாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











