Nerkonda Paarvai 'தல'க்கு பேனர், பிளெக்ஸ் வைத்தவன் இன்று அவர் படத்தில்:ஆதிக் ரவிச்சந்திரன்
சென்னை: தல படத்திற்கு பேனர் வைத்த நான் இன்று அவர் படத்தில் நடித்துள்ளேன் என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு நேர்கொண்ட பார்வை என்று தூய தமிழ் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
படத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கெட்ட பையனாக நடித்துள்ளார்.
அஜித்
தல அஜித் சாருக்கு பேனர்கள், பிளெக்ஸுகள் வைத்த பையன் தற்போது என் சூப்பர் ஸ்டாரின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்கிறேன். இந்த 15 நாட்கள் என்னை சிறந்தவனாக்கியுள்ளது. அதற்கு காரணம் அஜித் சார். இந்த வாய்ப்பை அளித்த தல அஜித் சார், சுரேஷ் சார், இயக்குநர் வினோத் சார் ஆகியோருக்கு நன்றி என்று ட்வீட் செய்துள்ளார் ஆதிக்.

வம்பு
நேர்கொண்ட பார்வை படத்தில் பெண்ணிடம் வம்பு இழுக்கும் கெட்டவனாக நடித்துள்ளார் ஆதிக். நெகட்டிவ் கதாபாத்திரம் என்று தெரிந்தும் தன் மீது உள்ள நம்பிக்கை மற்றும் அஜித் படம் என்பதால் நடித்துள்ளார் அவர்.

ரீமேக்
நேர்கொண்ட பார்வை படம் பிங்க் இந்தி படத்தின் ரீமேக் தான் என்றாலும் அதை அப்படியே எடுக்காமல் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் சில மாற்றங்களுடன் எடுக்கிறார் வினோத்.

ஸ்ரீதேவி
இந்த தலக்கு வேறு படமே கிடைக்கவில்லையா, பிங்க் ரீமேக் ஏன் என்று கேட்டால் அதற்கு காரணம் மறைந்த நடிகை ஸ்ரீதேவி தான். சமூகத்திற்கு நல்ல கருத்து சொல்லும் படத்தை அஜித்தை வைத்து தனது கணவர் போனி கபூர் தயாரிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அவர் விருப்பத்தை தான் அஜித் நிறைவேற்றி வைக்கிறார்.


Click it and Unblock the Notifications











