ரஜினிகாந்தை இயக்க பக்காவாக திட்டம் போடும் ஆதிக் ரவிச்சந்திரன்?.. அதே லோகேஷ் கனகராஜ் ஃபார்முலா!
சென்னை: விஜய் படத்தை முடித்த கையோடு எப்படி நெல்சன், லோகேஷ் கனகராஜ் எல்லாம் அடுத்தடுத்து ரஜினிகாந்த் படங்களை இயக்கி வருகிறார்களோ அதே ஃபார்முலாவை கையில் எடுத்து இருக்கிறாராம் ஆதிக் ரவிச்சந்திரன் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் படங்களை எடுத்த சிறுத்தை சிவாவுக்கு அண்ணாத்த படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி படங்களை எடுத்த ஏ.ஆர். முருகதாஸுக்கும் தர்பார் படத்தை எடுக்கும் வாய்ப்பு அமைந்தது.

இந்நிலையில், நாமும் சூப்பர் ஸ்டாரை வைத்து ஒரு படம் எடுத்து விட்டால் இந்தியளவில் முன்னணி இயக்குநர் ஆக மாறிவிடலாம் என்கிற பலே திட்டத்தை கையில் எடுத்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
ஜி.வி. பிரகாஷுக்கு டாட்டா: த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தின் மூலம் ஆதிக் ரவிச்சந்திரனை தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகப்படுத்தியவரே ஜி.வி. பிரகாஷ் தான். தொடர்ந்து குட் பேட் அக்லி படம் வரை தனது படங்களுக்கு ஜி.வி. பிரகாஷையே இசையமைக்க வைத்து வந்தார். குட் பேட் அக்லி படத்தின் பாடல்களும் தரமாகவே இருந்தது. ஆனால், தற்போது மீண்டும் அஜித்தை வைத்து ஆதிக் இயக்கவுள்ள படத்துக்கு அனிருத்தை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஜினிகாந்தை இயக்கத் திட்டம்: சிறுத்தை சிவா விவேகம் படத்தில் அனிருத்துடன் வேலை பார்த்த நிலையில் தான் ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது என்று கூறுகின்றனர். லோகேஷ் கனகராஜ், நெல்சன் என அனைவரும் அனிருத் வழியாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கதை சொல்லி படங்களை எடுத்து வரும் நிலையில், அஜித்தை வைத்து அடுத்து இயக்கும் படத்துக்கு அனிருத்தை ஒப்பந்தம் செய்தால், அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை பிடித்து விடலாம் என்கிற திட்டத்துடன் தான் அனிருத்தை நாடியிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஃபேன் பாய் சம்பவம்: அஜித் குமாருக்கே அத்தனை ரெஃபரன்ஸ்களை வைத்து ஃபேன் பாய் சம்பவம் செய்த ஆதிக் ரவிச்சந்திரன் கண்டிப்பாக சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்கினால், ரஜினிகாந்தின் 50 வருட திரை வாழ்க்கை ரெஃபரன்ஸும் உள்ளே வந்துவிடும் என்றே சொல்லலாம்.


Click it and Unblock the Notifications











