Ajith: அஜித்க்கு கோவில் கட்டாமல் ஓயமாட்டார் போலயே ஆதிக்.. இப்போ என்ன செஞ்சு இருக்காருனு தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக உள்ள நடிகர்களுக்கு திரையுலகில் உள்ள பல இளம் நடிகர்கள் தொடங்கி, பல இளம் டெக்னீசியர்கள் வரை தீவிர ரசிகர்களாக இருப்பார்கள். அனைத்து நடிகர்களையும் கலைஞர்களையும் பிடிக்கும் என்றாலும், யாரோ ஒருவருக்குத்தான் வெறித்தனமான ரசிகராக இருப்பார்கள். அப்படி அஜித்துக்கு இருக்கும் வெறித்தனமான ரசிகர்களில் ஒருவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.
கதை இல்லாமல் கூட படம் எடுப்பேன் அஜித் ரெஃபரன்ஸ் இல்லாமல் என்னால் படம் எடுக்க முடியாது என இருப்பவர் தான் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். தான் இயக்கிய படங்களில் அஜித் குறித்த ரெஃபரன்ஸ்கள் நேரடி காட்சிகளாகவோ, வசனமாகவோ, பாடல்களிலோ என எப்படியோ வைத்துவிடுவார். அப்படியானவர் அஜித்தை வைத்து எடுத்த படமான குட் பேட் அக்லி படம் அஜித்துக்கு சரியான நேரத்தில் தேவையான கம்பேக் கொடுக்கும் படமாக அமைந்துவிட்டது.

இந்த ஆண்டு அதாவது 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டித்தந்த படமாக மாறிவிட்டது. அஜித்தின் வெறித்தனமான ரசிகர் நான் தான் என்பதை படத்தின் தொடக்கத்தில் இருந்து கடைசி வரைக்கும் காட்டியிருந்தார். படம் முழுக்க அஜித்தின் பல படங்களின் ரெஃபரன்ஸ் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. இப்படி இருக்கும்போது அவரது அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்.
33 ஆண்டுகள்: இப்படி இருக்கும்போது அஜித் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 33 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்துடன் தான் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து 33 ஆண்டுகள் அஜித்திசம் என கேப்ஷன் இட்டுள்ளார். உங்களின் ஈடு இணையற்ற உழைப்பே ஒரு வைரத்தைப் போன்றது. லவ் யூ அஜித் சார்" எனவும் தெரிவித்துள்ளார். இவரது இந்த இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

அப்டேட்: பலரும் அஜித்தின் அடுத்த படம் எப்போது தொடங்கும் படத்தின் டைட்டில் என்ன? பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிவிடுமா என்று எல்லாம் கேள்வி கேட்டு வருகிறார்கள். ஆதிக் ரவிச்சந்திரனின் இந்த போஸ்ட்டைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் பலரும் போகிற போக்கைப் பார்த்தால் அஜித்துக்கு ஆதிக் ரவிச்சந்திரன் கோவில் கட்டாமல் இருக்க மாட்டார் போலயே என்று பதிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











