அடுத்த படமும் அஜித் சார் கூடத்தான்.. குட் பேட் அக்லி சம்பவம்.. ஆதிக் ரவிச்சந்திரனுக்கு செம ஜாக்பாட்!
சென்னை: வரும் ஏப்ரல் 10ம் தேதி அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகிறது. தனுஷின் இட்லி கடை படத்தின் ரிலீஸ் பல மாதங்கள் தள்ளிப்போயுள்ள நிலையில், சோலோ ரிலீஸாக அஜித் குமார் கல்லா கட்ட காத்திருக்கிறார். விடாமுயற்சி படம் வெளியாக தாமதமானதால் அதிரடியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த படம் தான் குட் பேட் அக்லி.
புஷ்பா 2 படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்த படம் விடாமுயற்சி படத்துக்கு முன்பாகவே ஒட்டுமொத்தமாக படப்பிடிப்பு முடிக்கப்பட்டு ரெடியாகி விட்டது. பொங்கலுக்கு வரும் என அறிவித்திருந்த நிலையில், விடாமுயற்சி படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தாமதமானது.

ஆனால், கடைசி நேரத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பிப்ரவரி மாதம் தான் விடாமுயற்சி வெளியானது. அப்படி இருந்தும் அந்த படம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. விடாமுயற்சி படம் ரசிகர்களுக்கு கொடுக்கத என்டர்டெயின்மென்ட்டை குட் பேட் அக்லி கண்டிப்பாக கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித் குமாரின் அடுத்த படத்தையும் தானே இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
செகண்ட் சிங்கிள் செம ஹிட்: ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் அனிருத் மற்றும் பால் டப்பா பாடிய "காட் பிளெஸ் யூ மாமே" பாடல் அதிரடியாக 10 மில்லியன் பார்வைகளை கடந்து டிரெண்டாகி வருகிறது. விடாமுயற்சி படத்தில் சவதீகா பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்த நிலையில், ரெடியா மாமே பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதிலும், கடைசியாக வரும் அந்த பால் டப்பா ராப் போர்ஷன் வெறித்தனம் எனக் கூறுகின்றனர்.
ஒவ்வொரு நாளும் மறக்க முடியாது: மார்க் ஆண்டனி எனும் வெற்றிப் படத்தை கொடுப்பதற்கு முன்பாகவே அஜித் சார் என்னை நம்பி கொடுத்த படம் தான் குட் பேட் அக்லி. அவருடன் பணியாற்றிய ஒவ்வொரு நாளுமே வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். நிச்சயம் படம் பார்க்கும் அனைவருக்குமே அந்த அனுபவத்தை கடத்துவேன் என எதிர்பார்க்கிறேன் என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் செம கான்ஃபிடன்ட்டாக பேசியுள்ளார்.
அடுத்த படமும் அஜித் சார் கூடத்தான்: சிறுத்தை சிவா, எச். வினோத் என தனக்கு ஒரு இயக்குநரை பிடித்து விட்டால் அஜித் குமார் தொடர்ந்து அந்த இயக்குநர்களுடன் அடுத்தடுத்த படங்களில் பயணிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ஆனால், மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான விடாமுயற்சி படம் சொதப்பிய நிலையில், குட் பேட் அக்லி படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை கொண்டிருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டியில், அடுத்த படமும் அஜித் சார் கூடத்தான் எனக் கூறியுள்ளார்.
கார் ரேசிங்கில் பிஸி: நடிகர் அஜித் குமார் சினிமாவை தாண்டி தற்போது உலகம் முழுவதும் நடைபெற்று வரும் கார் பந்தயங்களில் ரொம்பவே ஆர்வம் செலுத்தி வருகிறார். அடுத்த ஆண்டு வரை புதிய படங்களில் கமிட்டாகமாட்டேன் எனக் கூறியிருந்த நிலையில், அவருடைய அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போவது உறுதியாகியுள்ளது. கூடிய சீக்கிரமே குட் பேட் அக்லி டிரெய்லர் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











