அஜித்துக்காக கெட்ட பயலாக மாறிய சிம்பு பட இயக்குனர்

By Siva

சென்னை: அஜித்துக்காக கெட்டவனாக மாறியுள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.

த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் மூலம் இயக்குனர் ஆனவர் ஆதிக் ரவிச்சந்திரன். சிம்புவை வைத்து அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தை இயக்கினார்.

இந்நிலையில் ஆதிக் தல 59 படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ஆதிக்

ஆதிக்

தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற 3 ஆண்களை வழக்கறிஞரின் உதவியுடன் எதிர்த்து போராடும் 3 பெண்கள் பற்றிய கதை தான் தல 59 படத்தின் கதை. இந்தியில் பிங்க் என்ற பெயரில் வெளியான படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் அஜித் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்

அஜித்

3 பெண்களுக்கு உதவும் வழக்கறிஞராக அஜித் நடிக்க உள்ளார். இந்நிலையில் அந்த 3 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் 3 ஆண்களில் ஒருவராக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். நெகட்டிவ் கதாபாத்திரம் என்று தெரிந்தும் துணிச்சலாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் அவர்.

நடிகர்கள்

இயக்குனர்கள் நடிக்க வந்து கொண்டிருக்கும் நிலையில் ஆதிக்கும் நடிகர் ஆகியுள்ளார். ஹெச். வினோத் இயக்கும் தல 59 படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஆரம்பம் படத்தை அடுத்து தற்போது தான் யுவனுக்கு அஜித் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

தல 59 அஜித்துக்கு ஸ்பெஷலான படம். ஏனென்றால் இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் நடித்தபோது ஒரு தமிழ் படத்தில் சேர்ந்து பணியாற்றுவது பற்றி அஜித்தும், ஸ்ரீதேவியும் பேசினார்கள். அது தற்போது நடக்கிறது என்று படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X