Adhik Ravichandran marriage: சிவாஜி பேத்தியை கரம் பிடித்த ஆதிக் ரவிச்சந்திரன்.. விஷால் வாழ்த்து!
சென்னை: கடந்த சில ஆண்டுகளாக பல படங்கள் நடித்தும் வெற்றியை ருசிக்காமல் போராடிக் கொண்டிருந்த விஷாலுக்கு சமீபத்தில் மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் இன்று நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு மார்க் ஆண்டனி இயக்குநரை விஷால் வாழ்த்திய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேத்தியும் நடிகர் பிரபுவின் மகளுமான ஐஸ்வர்யாவைத் தான் ஆதிக் ரவிச்சந்திரன் டிசம்பர் 15ம் தேதி திருமணம் செய்துக் கொண்டுள்ளார் என்பது என்பது தான் இதில் ஹைலைட்.

பிரபு மகள் திருமணம்: சிவாஜி கனேசனின் மகனும் தமிழ் சினிமாவின் சின்னதம்பியுமான பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை இளம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. பல சினிமா பிரபலங்கள் பங்கேற்று ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை வாழ்த்தி வருகின்றனர்.
மாப்பிள்ளையான மார்க் ஆண்டனி இயக்குநர்: திரிஷா இல்லைனா நயன்தாரா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடல்ட் பட இயக்குநராக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்திரன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பாஹீரா என தோல்விப் படங்களை கொடுத்து வந்த நிலையில் இந்த ஆண்டு மார்க் ஆண்டனி மூலம் ஹிட் இயக்குநராக மாறியுள்ளார். இந்நிலையில், பிரபுவின் மகளை திருமணம் செய்துக் கொண்டு பெரிய இடத்து மாப்பிள்ளையாக மாறியுள்ளார்.
விஷால் நேரில் வாழ்த்து: விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரிது வர்மா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் திருமணத்தில் நடிகர் விஷால் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அடுத்து உங்க கல்யாணம் எப்போ விஷால் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அஜித் வரல: விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போவது உறுதியாகி உள்ளது. ஆனால், இந்த திருமணத்துக்கு அஜித் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் திருமணத்துக்கு அவர் வரவில்லை. ஐஸ்வர்யாவின் சகோதரர் விக்ரம் பிரபு திருமண வேலைகளை இழுத்துப் போட்டு செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











