ஹீரோ அவதாரம் எடுக்கும் சிம்புவால் படாதபாடுபட்ட இயக்குனர்: பட பெயரே பயங்கரமா இருக்கே

By Siva

Recommended Video

ஹீரோ அவதாரம் எடுக்கும் இயக்குனர்: படம் பெயரே பயங்கரமா இருக்கே- வீடியோ

சென்னை: சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் ஹீரோ அவதாரம் எடுக்கிறார்.

ஜி. வி. பிரகாஷ் குமார் நடித்த த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படம் மூலம் இயக்குனர் ஆனவர் ஆதிக் ரவிச்சந்திரன். அந்த படத்தை பார்த்து அவரை திட்டியவர்கள் எல்லாம் ஹர ஹர மகாதேவகியை பார்த்துவிட்டு ஆதிக் எவ்வளவோ பரவாயில்லை என்றார்கள்.

அதன் பிறகு அவர் சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கினார்.

ஆதிக்

ஆதிக்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை எடுத்து முடிக்கும் முன்பு ஆதிக் படாதபாடு பட்டார். சிம்பு படப்பிடிப்புக்கு வராமல் அவரை கதறவிட்ட கதை அனைவரும் அறிந்தது.

ஆதிக்

ஆதிக்

இயக்குனர்கள் ஹீரோவாக அவதாரம் எடுப்பது கோலிவுட்டுக்கு புதிது அல்ல. இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரனும் ஹீரோ அவதாரம் எடுக்கிறார். அவரை ஹீரோவாக போட்டு படம் எடுப்பவர் இருட்டு அறையில் முரட்டுக் குத்து புகழ் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.

அய்யய்யோ

அய்யய்யோ

சந்தோஷ் ஆதிக்கை ஹீரோவாக்கும் படத்திற்கு டிங் டாங் பெல் என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளார்களாம். என்ன சந்தோஷ், இதுவும் அடல்ட் காமெடியா, நடத்துங்க பாஸ்.

ஜிவி பிரகாஷ்

ஜிவி பிரகாஷ்

ஆதிக் மீண்டும் ஜி.வி. பிரகாஷ் குமாரை வைத்து 3டி படம் எடுக்கப் போகிறாராம். சமத்தாக நடித்துக் கொடுத்த ஜி.வி.யை வைத்து ஃபேன்டஸி படம் எடுக்கப் போகிறாராம் ஆதிக்.

அடல்ட் காமெடி

அடல்ட் காமெடி

சந்தோஷ் பி ஜெயக்குமார் என்றாலே அடல்ட் காமெடி மட்டும் தானா பாஸ்? அவர் குறைந்த பட்ஜெட்டில் அடல்ட் காமெடி படம் எடுத்து கல்லா கட்டுவதை பார்த்து பலர் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். ஆதிக் ஹீரோவாக நடிக்கும் படம் அடல்ட் காமெடியாக இருந்தால் என்ன எதிர்ப்பு எல்லாம் கிளம்பப் போகுதோ. எதுவாக இருந்தாலும் சரி, வாழ்த்துக்கள் ஆதிக்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X