Mark Antony - நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ் லிஸ்ட்டில் இணைந்த மார்க் ஆண்டனி இயக்குநர்
சென்னை: Adhik Ravichandran (ஆதிக் ரவிச்சந்திரன்) ரஜிகாந்த், லோகேஷ் கனகராஜ் வரிசையில் மார்க் ஆண்டனி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் இணைந்திருக்கிறார்.
விஷால் கடந்த பல வருடங்களாகவே ஒரு ஹிட்டுக்கு காத்துக்கொண்டிருந்தார். எப்படியாவது ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்த அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்தார். டைம் ட்ராவல் ஜானரில் படம் உருவாகியிருந்தது. விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

நல்ல வரவேற்பு: தமிழ் சினிமாவில் டைம் ட்ராவல் ஜானரில் வரும் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். இன்று நேற்று நாளை போன்ற படங்கள் அதற்கு உதாரணம். அப்படிப்பட ஜானரில் படம் வெளியானதால் எதிர்பார்ப்போடு படத்துக்கு சென்றனர் ரசிகர்கள். படத்தை பார்த்த ரசிகர்கள் தாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே படம் திருப்திப்படுத்திவிட்டதாக கூறினர்.
கலக்கிய ஆதிக்: ஆதிக் ரவிச்சந்திரன் இதற்கு முன்னதாக த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் ஆகிய படங்களை இயக்கியிருந்தார். அந்த இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தன. ஆனால் இரண்டு படங்களில் விட்டதை மார்க் ஆண்டனி படத்தில் பிடித்துவிட்டார். காட்சிக்கு காட்சி போர் அடிக்காமல் படத்தை அவர் நகர்த்தி சென்ற விதம் பெரும் பாராட்டை ரசிகர்களிடம் பெற்றிருக்கிறது.
எஸ்.ஜே.சூர்யா: படத்தின் ஹைலைட்டாக இருந்தது இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யாதான். வயதான எஸ்.ஜே.சூர்யாவாகவும், இள வயது எஸ்.ஜே.சூர்யாவாகவும் தனது நடிப்பில் வேரியேஷன் காண்பித்து அசத்தியிருக்கிறார் படத்தில். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா முதலில் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை என்பதும் பிறகும் ஆதிக் சொன்ன கதையை கேட்டு ஒத்துக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கார் பரிசு: மார்க் ஆண்டனி படம் மொத்தம் நூறு கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது விஷாலின் கரியரில் முதன்முறை என்பது கவனிக்கத்தக்கது. இந்நிலையில் படமானது 100 கோடி ரூபாய் வசூலித்ததை அடுத்து படத்தின் தயாரிப்பாளர் வினோத் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பிஎம்டபிள்யூ கார் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார்.
இதுகுறித்து ஆதிக் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிஎம்டபிள்யூ காரை பரிசளித்ததற்கு நன்றி வினோத்.விஷால், எஸ்ஜே சூர்யா, ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி" என்று குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக விக்ரம் படம் வெற்றியடைந்ததால் லோகேஷ் கனகராஜுக்கு கமல் ஹாசனும், ஜெயிலர் படம் வெற்றியடைந்ததால் நெல்சன் திலீப்குமாருக்கு கலாநிதிமாறனும் காரை பரிசளித்திருந்தது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











