கவலையேபடாதீங்க.. அதிரிந்தி மாஸ் ஆக வெளியாகும்.. தேனாண்டாள் பிலிம்ஸ் உற்சாக தகவல் #Mersal
Recommended Video

ஹைதராபாத்: மெர்சல் படத்தின் தெலுங்கு பதிப்பான அதிரிந்தி இன்று ரிலீஸாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிரிந்தியில் எந்த காட்சிகளும் நீக்கப்படவும் இல்லை, மியூட் செய்யப்படவும் இல்லை என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெர்சல் படத்தில் வரும் ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா வசனங்களுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து அக்காட்சிகளை நீக்குமாறு கூறி அடம்பிடித்தது.
இந்நிலையில் மெர்சலின் தெலுங்கு பதிப்பான அதிரிந்திக்கும் அதே காட்சிகளால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

ரிலீஸ்
ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா வசனங்களால் அதிரிந்திக்கு இன்னும் சென்சார் சான்று கிடைக்கவில்லை. இதனால் திட்டமிட்டபடி படத்தை இன்று ரிலீஸ் செய்ய முடியவில்லை.

மியூட்
அதிரிந்தியில் வரும் சர்ச்சைக்குரிய வசன காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது என்றும், நீக்கப்படவில்லை மியூட் செய்யப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகின.
அறிவிப்பு
காட்சிகள் நீக்கப்பட்டதாகவும், மியூட் செய்யப்பட்டதாகவும் கூறப்படுவதில் உண்மை இல்லை. அதிரிந்தி விரைவில் ரிலீஸாகும். மாஸ் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சேபனை
சென்சார் போர்டு சான்றிதழ் அளித்த பிறகு பாஜக எதற்கு எதிர்க்கிறது என்ற கேள்வி தமிழகத்தில் எழுந்தது. அதனால் தெலுங்கு பதிப்பில் சென்சார் சான்று கிடைப்பதில் பாஜக பிரச்சனை செய்வதாக பேச்சு அடிபடுகிறது.


Click it and Unblock the Notifications











