தெலுங்கில் வெளியானது அதிரிந்தி... சர்ச்சை காட்சிகளுக்கு 'மெர்சல்' ரெஸ்பான்ஸ்!
சென்னை: விஜய்யின் மெர்சல் படத்தின் தெலுங்குப் பதிப்பான அதிரிந்தி படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பிரமாண்டமாக இன்று வெளியானது.
தமிழில் கடந்த தீபாவளியன்று வெளியாகி வசூல் சாதனைப் படைத்த மெர்சல் படம், தெலுங்கில் அதிரிந்தி என டப் செய்யப்பட்டது. இந்தப் படத்தை தீபாவளிக்கு அடுத்த வாரம் வெளியிடத் திட்டமிட்டனர். ஆனால் சென்சார் பிரச்சினையால் படம் வெளியாகவில்லை.

யுஏ
கடந்த 2-ம் தேதிதான் அதிரிந்திக்கு யுஏ சான்று கிடைத்தது. இதைத் தொடர்ந்து படம் இன்று வெளியாகும் என தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.

வரவேற்பு
இன்று ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் அதிரிந்தி படம் வெளியானது. இரு மாநிலங்களிலும் 500க்கும் மேற்பட்ட அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

வரவேற்பு
தமிழில் சர்ச்சைகளைக் கிளப்பிய காட்சிகள் அனைத்துக்கும் ஆந்திராவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக மருத்துமனையில் நடக்கும் முறைகேடுகள் குறித்த காட்சிகள், வசனங்களை மக்கள் ரசிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவிலும்
அதிரிந்தி படம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் வெளியாகியுள்ளது. அங்கு 25 மால்களில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இங்கிலாந்திலும் சில அரங்குகளில் படம் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











