For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என் மகனுக்கு அன்பான ரசிகர்கள் கிடைச்சிருக்காங்க... இதை விட வேற என்ன வேணும் - விக்ரம்

|
vikram speech at Adhithya varma audio launch

சென்னை: ஓர் தந்தை தன் மகனுக்காக வீடு, பணம், சொத்து இவற்றை சம்பாதித்து வைக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால் நான் என்

மகனுக்கு கொடுக்க நினைப்பது இந்த ஆரவாரம் செய்து கொண்டாடும் ரசிகர்களைத்தான். எனக்கு அடுத்து என் மகனிற்கு கைதட்டி, விசிலடிக்கும் இத்தனை அன்பானரசிகர்கள் அவனுக்கு கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று கூறியுள்ளார் விக்ரம். ஆதித்ய வர்மா படத்தின் பாடல் வெளியீட்டு விழா செய்தியாளர் சந்திப்பு இன்று நடந்தது. சத்யம் சினிமாஸில் நடந்த நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக் தான் ஆதித்ய வர்மா. சீயான் விக்ரம் மகன் த்ருவ் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள முதல் படம் ஆதித்ய வர்மா. இந்த படம் வரும் நவம்பர் 8ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆதித்ய வர்மா படம் வரும் நவம்பர் 8ம் தேதி வெளியாகவுள்ளது.

Adhithya Varma audio launch press meet Vikram speech

ட்ரெய்லரில் கட்டுப்படுத்த முடியாத கோபம், கவலை, அழுகை, பாசம் என அனைத்தையும் கலவையாக பல்வேறு உணர்ச்சிகளை அழகாக காண்பித்துள்ளார் த்ருவ் விக்ரம். ட்ரெய்லரில் த்ருவ், கிரிசாயா மட்டும் அல்ல விக்ரமின் உழைப்பும் தெரிகிறது. அப்பா இல்லை என்றால் ஆதித்ய வர்மா இல்லை என்று த்ருவ் பேட்டிகளில் கூறி வருகிறார்.

ரிலீசாக போகுது ஆதித்யா வர்மா பாடல்கள்… உச்சகட்ட சந்தோஷத்தில் துருவ் விக்ரம்!

விஜய் அவர் பாணியில் சிறப்பாக செய்திருந்தார் என்றால், த்ருவ் தன் ஸ்டைலில் நன்றாக நடித்துள்ளார். ஆதித்ய வர்மா படம் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக மகனுடனேயே இருந்து மெனக்கெட்டுள்ளார் விக்ரம். முன்னதாக த்ருவை வைத்து பாலா இயக்கிய வர்மா படத்தில் நெருக்கமான காட்சிகள் மிகவும் விரசமாக தெரிந்ததாக புகார் எழுந்தது. அதே நேரத்தில் கிரிசாயா இயக்கியுள்ள இந்த படத்தில் லிப் டூ லிப் முத்தக் காட்சிகள், படுக்கையறை காட்சிகள் ட்ரெய்லரில் இருந்தாலும் விரசமாக தெரியவில்லை என ரசிகர்கள் கூறியுள்ளனர்.

Adhithya Varma audio launch press meet Vikram speech

ஆதித்ய வர்மா படத்தில் பிரியா ஆனந்த், ஈஸ்வரி ராவ் நடித்துள்ளனர். பள்ளி கல்லூரி மாணவிகள் மத்தியில் த்ருவ்தான் தற்போது ட்ரெண்ட். ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளது. இதைத்தான் உற்சாகமாக கூறியுள்ளார் விக்ரம். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா செய்தியாளர் சந்திப்பு இன்று நடந்தது. சத்யம் சினிமாஸில் நடந்த நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன.

விக்ரமும் அவரது மகன் த்ருவும் இணைந்து மேடையில் ஒரு பாடலை பாடினார்கள். இந்த பாடல் நிச்சயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகும். அப்பா மகன் உறவை ஒரு நண்பர்கள் போல் எடுத்து செல்லும் இந்த அழகு அங்கு இருந்தவர்களை பரவசப்படுத்தியது. மகன் வளர்ச்சியையும், அவனுக்கு கிடைக்கும் பாராட்டுகளையும் பார்க்கும் போது எந்த தந்தைக்கு தான் அந்த பேரானந்தம் இருக்காது. இது விக்ரம் - துருவ் இருவர் முகத்திலும் அழகாக வெளிப்பட்டது.

மேடையில் பேசிய விக்ரம், ஓர் தந்தை தன் மகனுக்காக வீடு, பணம், சொத்து இவற்றை சம்பாதித்து வைக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால் நான் என் மகனுக்கு கொடுக்க நினைப்பது இந்த ஆரவாரம் செய்து கொண்டாடும் ரசிகர்களைத் தான். எனக்கு அடுத்து என் மகனிற்கு கைதட்டி, விசிலடிக்கும் இத்தனை அன்பான ரசிகர்கள் அவனுக்கு கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என்றார். ஒவ்வொருவர் குறித்தும் தனித்தனியே பேசி நன்றி தெரிவித்த விக்ரம், தொடர்ந்து படம் உருவாக உதவி புரிந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து, நான் ஒரு ஃபோன்தான் பண்ணேன். சிவா... எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் சிவா இந்தப் படத்துக்கு ஒரு சாங் எழுதணும்'னு கேட்டேன். அவர் உடனே எழுதித்தந்தார். மற்ற எல்லா பாடல்களிலும் ஓரிரு வரிகளை நாங்க மாற்றினோம். ஆனால், சிவா எழுதிய பாட்டுல மட்டும் எதுவுமே மாற்றல. அந்த அளவுக்கு அருமையாக எழுதித்தந்தார். தேங்க்ஸ் சிவா என்று கூறினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் துருவ்வை சப்போர்ட் செய்து கைதட்டி ரசித்து ஊக்குவித்தவர்களில் ஒருவர்

இளைய தளபதி விஜய் மனைவி சங்கீதா. நடிகர் விக்ரம் குடும்பத்துடன் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் சங்கீதா. பல ஆண்டுகளாகவே அவர்களின் இரு குடும்பத்திற்கும் ஒரு நல்ல உறவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதித்ய வர்மா திரைப்படம் மக்களிடம் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படம் நவம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

English summary
Releasing on November 8, Adithya Varma features Dhruv Vikram and Banita Sandhu Vikram Speech at Aditya Varma Audio Launch function with Dhruv Vikram
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more