த்ருவ் விக்ரமின் ஆதித்யா வர்மா கைவிடப்பட்டதா?: தயாரிப்பாளர் விளக்கம்

By Siva

Recommended Video

Adithya Varmaa: அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக் கைவிடப்பட்டதா?

சென்னை: அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக் கைவிடப்பட்டது என்று வெளியான செய்தி குறித்து தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தை த்ருவ் விக்ரமை வைத்து வர்மா என்ற பெயரில் பாலா ரீமேக் செய்தார். அவர் ரீமேக் செய்தது பிடிக்கவில்லை என்று தயாரிப்பு தரப்பு தெரிவித்ததுடன் படத்தை மறுபடியும் ஷூட் செய்து வருகிறது.

ஆதித்யா வர்மா என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தை அர்ஜுன் ரெட்டி பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவின் உதவியாளர் கிரிசாயா இயக்கி வருகிறார்.

டீஸர்

டீஸர்

அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபிர் சிங்கின் டீஸர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆனால் ஆதித்யா வர்மா பற்றி எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் ஆதித்யா வர்மா கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியானது.

ஆதித்யா வர்மா

ஆதித்யா வர்மா கைவிடப்படவில்லை. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரு பாடலை படமாக்க படக்குழு போர்ச்சுகலுக்கு கிளம்பியதையும் தயாரிப்பாளர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

த்ருவ் விக்ரம்

த்ருவ் விக்ரம்

செல்வராகவன் போன்று கிரிசாயாவும் அப்டேட் கொடுக்க விரும்பாதவர் போன்று. சத்தமில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவர் சத்தமே காட்டாததால் படப்பிடிப்பு போய்க் கொண்டிருக்கிறதா இல்லையா என்பது தெரியாமல் போயுள்ளது. த்ருவுக்கு இந்த முதல் படம் என்பதால் விக்ரம் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

ஹீரோ

ஹீரோ

வர்மா படத்தின் ஹீரோ த்ருவை தவிர ஹீரோயின், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். ஏற்கனவே கபிர் சிங் பட்டையைக் கிளப்பியுள்ளதால் ஆதித்யா வர்மா எப்படி டஃப் கொடுக்கப் போகிறார் என்பதை பார்க்கும் ஆவல் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X