நடிகை அதிதி என் மனைவி, காரில் அழைத்துச் சென்று மிரட்டினார்கள்: அபி சரவணன்

By Siva

Recommended Video

பிரபல நடிகர் அபி சரவணன் காரில் கடத்தப்பட்டதாக போலீசாருக்கு வந்த தகவல்- வீடியோ

சென்னை: காரில் கடத்தப்பட்டது குறித்தும், நடிகை அதிதி மேனனுடன் திருமணம் நடந்தது குறித்தும் நடிகர் அபி சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் அபி சரவணனும், நடிகை அதிதி மேனனும் காதலித்து திருமணம் செய்து பின்னர் பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் அதிதி மேனன் ஆள் வைத்து அபி சரவணனை கடத்தியதாக செய்திகள் வெளியாகின. வீடு திரும்பிய அபி தன்னை யாரும் கடத்தவில்லை என்றார்.

இதற்கிடையே அபிக்கும், தனக்கும் திருமணம் நடக்கவில்லை என்று அதிதி தெரிவித்தார். மேலும் அபி மீது போலீசில் புகாரும் அளித்துள்ளார். இது குறித்து அபி சரவணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அதிதி மேனன்

அதிதி மேனன்

அதிதி மேனனுக்கும், எனக்கும் திருமணம் நடந்தது உண்மையே. கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டோம். அதன் பிறகு 3 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தோம்.

நீதிமன்றம்

நீதிமன்றம்

ஒரு நாள் நான் வெளியூர் சென்றிருந்தபோது பீரோ, சூட்கேஸை உடைத்து பொருட்களை எடுத்துக் கொண்டு அதிதி சென்றுவிட்டார். அதிதியை என்னுடன் சேர்த்து வைக்குமாறு நீதிமன்றத்தில் வழத்து தொடர்ந்திருக்கிறேன்.

பொய்

பொய்

எங்களுக்கு திருமணம் நடக்கவில்லை என்றும், நான் போலி ஆவணங்களை காட்டி மிரட்டுவதாகவும் அதிதி சொல்வதில் உண்மை இல்லை. திருமணம் நடந்ததற்கான ஆதாரங்களை நான் வைத்திருக்கிறேன். சமூக சேவைக்காக திரட்டிய நிதியை வைத்து நான் வீடு, கார் வாங்கியதாக அதிதி கூறியதில் உண்மை இல்லை. கடன் வாங்கித் தான் வீடு, கார் வாங்கினேன்.

சட்டம்

சட்டம்

அதிதி ஏற்கனவே கேரளாவில் இருந்தபோது பலர் மீது புகார் தெரிவித்திருக்கிறார். ஒரு இயக்குநர் மீது கூட புகார் தெரிவித்தார். அதிதியுடன் சமரசம் செய்து வைப்பதாகக் கூறி சிலர் என்னை காரில் அழைத்துச் சென்று வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று மிரட்டினார்கள். அதிதியுடன் மீண்டும் சேர்ந்த வாழ தயாராக உள்ளேன். அவர் தெரிவித்த புகாரை சட்டப்படி சந்திப்பேன் என்றார் அபி சரவணன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X